Header Ads

Header ADS

யாருக்கெல்லாம் வெளியூர் செல்ல அனுமதி?


Allow Meaning - YouTube


கொரோனா வைரஸ் பரவுவவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய நிகழ்வுகளுக்கு வெளியூர் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சில நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது.

அவை,

*அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மகன், மகள் என, ரத்த சம்பந்தமானவர்களின் திருமணத்திற்கு மட்டுமே, அனுமதி சீட்டு வழங்கப்படும். மேற்கண்ட நபர்களின் இறப்பு தொடர்பாக, துக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, அனுமதி வழங்கப்படும். பெரியப்பா, சித்தப்பா, மாமா போன்ற உறவினர்கள் இறப்புக்கு, அனுமதி சீட்டு கிடையாது
 
*குடும்ப உறுப்பினர்களான, அண்ணன், அக்கா, தங்கை, மனைவி; நோய் வாய்ப்பட்டு தனியாக இருக்கும், தாத்தா, பாட்டி ஆகியோரின் மருத்துவம் தொடர்பாக செல்லவும், மனைவியின் பிரசவம்தொடர்பாக செல்லவும், அனுமதி சீட்டு வழங்கப்படும்.

*வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில், துணை ஏதும் இல்லாமல் தனியாக வசிக்கும், ரத்த சம்பந்தமான முதியோர்களையும், நோய் வாய்ப்பட்ட பெற்றோரை அழைத்து வரவும், அனுமதி வழங்கப்படும்

*பெற்றோரை விட்டு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில்,உறவினர்களிடம் இருக்கும், இரண்டரை வயது மகன், மகளை அழைத்து வர, அனுமதி வழங்கப்படும்
 
*கோரிக்கை கடிதங்களை, சந்திக்க விரும்பும் நபர்களின், தேவையான அடையாள ஆவணங்களுடன், சென்னை, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்

*மேலும், 75300 01100 என்ற, மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாகவும், 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக, கோரிக்கை கடிதம் மற்றும் அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தும், அனுமதி சீட்டு கோரலாம். gcpcorona2020@gmail.com என்ற, மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்

*கோரிக்கை கடிதங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து, உண்மையாக இருந்தால் மட்டுமே, அனுமதி சீட்டு வழங்கப்படும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.