Header Ads

Header ADS

ஏப்ரல் மாதம் முதல் 45 நாட்களுக்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி - ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு.

Image result for தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2020


தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2020ம் ஆண்டு நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு தீவி ரம் காட்டி வருகிறது . இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வருவாய்த்துறை நிர்வாக ஆணையரும் , அரசு முதன்மை செயலாள ருமான ராதாகிருஷ்ணன் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார் .
 
அதன் படி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வீடியோ கான்ப ரன்சிங்கில் திருப்பத்தூர் கலெக்டர் சிவனருள் , ராணிப்பேட்டை கலெக் டர் திவ்யதர்ஷினி , வேலூர் டிஆர்ஓ பார்த்தீபன் ஆகி யோர் கலந்து கொண்ட னர் .

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறிய தாவது : ஏப்ரல் மாதம் முதல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள் ளது . அதற்கான பணிகளில் அந்தந்த மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது . இந்த பணியில் ஆசிரியர் கள் மற்றும் அரசு ஊழியர் கள் மட்டும் ஈடுபடுத்தப் பட உள்ளனர் . கடந்த முறை போல தொண்டு நிறுவன ஊழி யர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார் கள் .

முழுக்க முழுக்க இந்த அரசு ஊழியர்களால் மட் டுமே நடத்தப்படுகிறது . ஒரு அரசு ஊழியர் தனக்கு வழங்கப்படும் பகுதியில் 45 நாட்களுக்குள் கணக்கெடுத்து முடிக்க வேண்டும் . வீடு , வீடாக சென்று கணக் கெடுக்க வேண்டும் . ஒரே இடத்தில் அமர்ந்து கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர் .

இந்த பணிக்கு என தனியாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது . அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்டம் வாரியாக பிரித்து வழங் கப்பட்டுள்ளது . பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பட்டியல் தாலுகா வாரி யாக தயாரிக்க உத்தரவி டப்பட்டுள்ளது .
 
இதற்கான ஆயத்தபணி களை இந்த மாதத்துக்குள் முடித்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் . இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி மோதகாலத்துக்குள் முடிக் கப்படும் . பின்னர் அடுத்த ஆண்டு 2021ம் ஆண்டு மக் கள் தொகை விவரம் வெளி யிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் .

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.