Header Ads

Header ADS

26 ஆண்டுகள் மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்த தலைமை ஆசிரியருக்கு பாராட்டு




அரசு பள்ளிகளில், 26 ஆண்டுகள் மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது, பணி நீட்டிப்பில் உள்ள தலைமை ஆசிரியருக்கு, பாராட்டு விழா நடந்தது.


திருத்தணி கல்வி மாவட்டத்தில் உள்ள அமிர்தாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராக, கடந்தாண்டு ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றவர் ஆர்.சம்பத்குமார்.இவர், தற்போது பணி நீட்டிப்பில், அதே பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர், 1992ம் ஆண்டு முதல், அரசு பணியில் சேர்ந்து, 16 ஆண்டுகள் கணித பட்டதாரி ஆசிரியராகவும், 10 ஆண்டுகள் அமிர்தாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.தமிழக அரசு விடுப்பு விதிகளின்படி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு விடுப்பு சலுகை வழங்கியுள்ளது.
பரிசு
அதன்படி தலைமை ஆசிரியர், தன் பணிக் காலத்தில், 540 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுக்க அனுமதியுள்ளது.ஆனால், தலைமை ஆசிரியர் சம்பத்குமார், தன் பணிக் காலத்தில் ஒரு நாள் கூட மருத்துவ விடுப்பு எடுக்காமல், 26 ஆண்டுகள், 8 மாதங்கள் அர்ப்பணிப்போடு பணிபுரிந்து முடித்துள்ளார்.இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பத்குமாருக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில், பெற்றோர் சங்க தலைவர், செயலர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அமிர்தாபுரம் பகுதி மக்கள், தலைமை ஆசிரியர் சம்பத்குமாரை பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.