மேலும் கூடுதல் எண்ணிக்கையில் பள்ளிகளை தரம் உயர்த்தி சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு.
110 விதி இன்றைய அறிவிப்பு
50 நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாகவும்
50 பள்ளி மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்படும்
உயர்
கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும் , கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும் , உயர் கல்வித் துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் . வரும் கல்வி ஆண்டு முதல் | இக்கல்லூரிகள் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
நான்
13 . 3 . 2020 அன்று பேரவையில் , சட்டப்பேரவை விதி 110ன் கீழ் , பள்ளிக் | கல்வித் துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்புகளில் , வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தேன் . தற்போது , பல்வேறு தரப்பினரிடமிருந்தும் , பெற்றோர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் . ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக . 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , மேலும் 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் , வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன் .
No comments
Post a Comment