Header Ads

Header ADS

School Morning Prayer Activities -15.02.2020


School Morning Prayer Activities -14.02.2020

திருக்குறள்

அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:382

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

விளக்கம்:
 
அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளும் அரசனுக்கு இயல்பாக இருக்க வேண்டும்.

பழமொழி

Ask much to have a little.

  சிறிது பெற பெரிது கேள்.

இரண்டொழுக்க பண்புகள்

1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.
 
2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.

பொன்மொழி

வெற்றி ஒருவரை பலமுறை கைவிட்டாலும் முயற்சியை ஒருநாளும் கைவிடக்கூடாது..

                - ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு

1. செஸ் விளையாட்டு தோன்றிய நாடு எது?

இந்தியா

2. மின்சாரத்தின் தந்தை என்று அழைக்கப் படுபவர் யார்?

மைக்கேல் ஃபாரடே

English words & meanings

 Quaggy - marshy, wet land. சதுப்பு நில தன்மையுள்ள,

quakey - shakey, ஆட்டம் கொடுக்கிற

ஆரோக்ய வாழ்வு

இளநீர் முகப்பருக்கள் வருவதைத் தடுக்கும் சரும பாதிப்புகளை தடுக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

Some important  abbreviations for students

Sm - Smart-phone.

Sync - Synchronus

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

நன்றி மறவா எறும்பு

குறள் :
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

விளக்கம் :
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று, உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

கதை :
ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.

எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பிய எறும்பு, புறாவுக்கும் நன்றி கூறியது.

மற்றொரு நாள், ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு. ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.

விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது. கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது. எறும்புக்கும் நன்றி சொன்னது.

அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.

எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.

நீதி :
எப்பொழுதும் யார் செய்த உதவியையும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

15.02.20

தமிழக அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடும்,
உயர் கல்வித்துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இனி புதிதாக வரும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை எஃப்.சி. (தரச் சான்று) என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் போன்றவற்றை வழங்குவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பிரிட்டினின் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எலிசபெத் கோபுரத்தில் உலகின் புகழ்பெற்ற பிக் பென் கடிகாரம் உள்ளது. கடந்த 1856-ம் ஆண்டில் இந்த கடிகாரம் வடிவமைக்கப்பட்டது. தற்போது கடிகார பழுது பணிக்காக ரூ.742 கோடி செலவிடப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.




77வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் நடந்து வருகிறது . ஜோஸ்னா, தமிழக வீராங்கனை சுனைனா ஆகிய இருவரும் அரையிறுதிக்குள் நுழைந்தனர்.

Today's Headlines

🌸For the 2020 - 2021  budget of Tamil Nadu Government for School Education the highest amount of Rs. 34,181 crores and for Higher Education Rs. 5,052 crores are alloted.

 🌸In the on coming years for the public transport there will be FC for once in two years says Transport Department

 🌸The state government of Andhra Pradesh has decided to give 3 years' imprisonment to the person who gave money for the voters  in  their local elections.

 🌸The world-famous Big Ben Clock is in the Tower of Elizabeth in the Parliament House of Britain.  The watch was designed in 1856.  The state government has announced that it will spend Rs 742 crore for the clock's repair.

 🌸The 77th National Senior Squash Championships are being held at Nehru Park, Chennai.  Josna and Tamil Nadu player Sunaina both entered the semifinals.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.