School Morning Prayer Activities- 29-02-2019
திருக்குறள்
அதிகாரம்:கல்வி
திருக்குறள்:393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
விளக்கம்:
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
பழமொழி
Yourself
first ,others afterwards.
தனக்கு மிஞ்சித் தான் தானமும் தருமமும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.
2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.
பொன்மொழி
எதை
செய்யும் முன்னரும் நான்கு முறை உன் மூளையை திரட்டி சிந்தனை செய்வாயானால் நிச்சயம் தெளிவு பிறக்கும்....
பொது
அறிவு
1.உலகிலேயே அதிக எரிமலைகள் கொண்ட நாடு எது?
இந்தோனேஷியா
2.உலக சிட்டுக் குருவிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 20.
English
words & meanings
Envelope -
the paper cover for a letter. Noun. கடிதத்திற்கான காகித உறை.
Envelop -to
cover or surround somebody. Verb. ஒருவரை மூடுதல்.
ஆரோக்ய வாழ்வு
நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Some
important abbreviations for students
GG - Good
Game
GJ - Good
Job
நீதிக்கதை
பஞ்சதந்திரக் கதைகள்
ஆப்பைப் பிடுங்கிய குரங்கு
மகத
நாட்டில் சிவா எனும் தச்சன் வாழ்ந்து வந்தான். அவன் அவ்வூர் கோயில் வேலைக்காக மரங்களை அறுத்து கொண்டிருந்தான்.
மாலை
வேளை நெருங்கவும் சிவா தான் பாதியில் அறுத்து கொண்டிருந்த மரத்தில் ஆப்பு ஒன்றை சொருகி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றான்.
அருகில் இருந்த மரத்தில் ஏராளமான குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒரு குரங்கு சிவா பாதி அறுத்து விட்டு சென்ற மரத்தின் மீது விளையாடியது.
சும்மா இல்லாமல் அம்மரத்தின் மீதே அமர்ந்து கொண்டு அங்கே சொருகி வைத்திருந்த ஆப்பை அசைத்து ஆட்டிப் பிடுங்கியது.
அச்சமயத்தில் அக்குரங்கின் கால்கள் ஆப்பு வைத்திருந்த பிளவில் மாட்டிக் கொண்டது. இரவு நெருங்கும் நேரம் ஆகவே ஒருவரும் உதவி செய்ய இல்லாமல் மாட்டிகொண்டு இறந்துபோனது.
நீதி
:
தனக்கு தகாத காரியங்களை செய்தல் ஆகாது!
இன்றைய செய்திகள்
29.02.20
★தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் இரு ஷிப்டுகளாக இருந்த வகுப்புகள் தற்போது ஒரே ஷிப்டாக மாற்றப்பட உள்ளன. இதற்கான அடிப்படை வசதிகள் என்னென்ன வேண்டும் எனக் கேட்டு உயர் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
★2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுத சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
★அரசு மருத்துவர்களுக்குப் போராட்டம் நடத்த உரிமையில்லை எனத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களைப் பணிமாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
★மகாராஷ்டிர மாநிலத்தில், பிறக்கும்போதே 2 லட்சம் குழந்தைகளுக்கு எடை குறைவு, ஆரோக்கியக் குறைவு காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 22,179 பேர் மும்பையில் பிறந்தவர்கள்.
★பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பிளாக்ஹோல் அதாவது கருந்துளையிலிருந்து மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
★தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் ஆட்டத்தில் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
Today's
Headlines
🌸Two shifts in Government Arts and
Science Colleges in Tamil Nadu are now going to be merged into single shift so
the Department of Higher Education has sent a circular asking what are the
basic amenities they need for the single shift.
🌸 With the commencement of public
examination for the 2019-2020 academic year , special privileges have been
granted for the differently abled
students.
🌸The Madras High Court has ruled that the government doctors have no right
to protest, and have cancelled the transfer orders given by the government for
the protesting doctors.
🌸In the state of Maharashtra, more than 2 lakh babies born with low weight
and less health . In the last year alone more than 12,000 children died says
the Maharashtra state government report.
Of these, 22,179 were born in Mumbai.
🌸Astronomers have discovered that the largest eruption took place in
the largest black hole of the universe.
🌸Australia won the series and the trophy by 2-1 in the third T20 cricket
match against South Africa by 97 runs.
Prepared by
Covai women
ICT_போதிமரம்
No comments
Post a Comment