DEE - பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்திட வழிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு
அரசாணையின் நகல் மற்றும் பள்ளி காய்கறித் தோட்டம் வழிகாட்டுதல்களை இணைத்துடன் இணைத்து தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது . மாவட்ட வாரியாக பள்ளி காய்கறித் தோட்டம் அமைக்கப்படவுள்ள பட்டியல் அரசாணையின் இணைப்பில் உள்ளது . எனவே சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க ஏதுவாக தோட்டக்கலை அலுவலர் , KVK ( Krishi Vigyan Kendra ) அலுவலர் , வட்டார வளர்ச்சி அலுவலர் . வேளாண்மை அலுவலர் , விவசாயத்திலுள்ள குழந்தைகளின் பெற்றோர் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , பள்ளி மேலாண்மைக் குழு , ஆசிரியர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்களது மேலான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பள்ளி காய்கறி தோட்டத்தினை அமைக்க வேண்டும் . மேலும் பள்ளி மாணவ தேசிய பசுமை படை குழுக்கள் மூலமாகவும் திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
No comments
Post a Comment