Header Ads

Header ADS

சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைகிறது!!

Image result for சேமிப்புக்கான வட்டி விகிதம்

பாரத ஸ்டேட் வங்கி ( எஸ்பிஐ ) மற்றும் மூன்று பொதுத் துறை வங்கிகளில் சேமிப்பு மற் றும் கடன்கள் மீதான வட்டி குறைக்கப்பட்டுள்ளது . ரிசர்வ் வங்கி சமீபத்திய நிதிக் கொள் கையில் வங்கிகளுக்கு அளிக் கும் கடன் மீதான வட்டியைக் குறைத்தது .

அதாவது இந்த வட்டி காலத்தை ஓராண்டு வரை யாக நீடித்துள்ளது . இதனால் வங்கிகளும் தங்களிடம் பொது மக்கள் சேமிக்கும் நிரந்தர சேமிப்புகளுக்கான வட்டியைக் குறைத்துள்ளன . வழங்கும் கட னுக்கானவட்டியும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ நிரந்தர சேமிப்புக்கான வட்டியை 6 சதவீதமாக
நிர்ணயித்துள்ளது . கடனுக்கான வட்டி
 7 . 90 % லிருந்து 7 . 85 % ஆக குறைக்கப்பட்டுள்ளது . ரிசர்வ் வங்கி ஒரு லட்சம் கோடியை வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்காக ஒதுக்கியுள்ளது . இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ஓராண்டுக்கு மாறா மலிருக்கும்.

 இதனால் வங்கி களும் தாங்கள் அளிக் கும் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளன . பாங்க் ஆஃப் இந்தியா 6 மாதம் வரையிலான சேமிப்பு களுக்கான வட்டி விகி தத்தை 10 புள்ளிகள் வரை குறைத்துள்ளது . வீட்டுக்கடனுக் கான வட்டி விகிதத்தை 8 சதவீதம் என அறிவித்துள்ளது.

கனரா வங்கி சேமிப்புகள் மீதான வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைத்துள் ளது . கடன்கள் மீதான வட்டி விகிதம் 15 புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது . ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியும் சேமிப்பு கள் மீதான வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் அளவிலும் கடன் கள் மீது ஓராண்டுக்கான வட்டியை 8 . 15 % அளவிலும் குறைத்துள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.