Header Ads

Header ADS

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணிநியமன ஆணைப்பெற்ற ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

Image result for trb
1. தேர்வாளர் நியமனம் செய்யப்பட்ட பள்ளியில் பணியிடம் காலியாகவுள்ளதா என்பதை உறுதி செய்த பின்புதான் தேர்வாளரை பணியில் சேர தலைமை ஆசிரியர் அனுமதிக்கவேண்டும்.
2. தேர்வாளர் பணியில் சேரும் போது சிவில் சர்ஜன் தகுதிக்குக் குறையாத தகுதியுடைய மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதிச் சான்றினை உரிய படிவத்தில் பெற்று தலைமையாசிரியரிடம் அளித்தல்வேண்டும். இதனை அன்னாரது பணிப்பதிவேட்டில் பாதுகாப்பாக இணைத்துக்கொள்ள தலைமையாசிரியர் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
3. மேற்கண்டவாறு நிரப்பப்படும் முதுகலையாசிரியர்/உடற்கல்விஇயக்குநர் நிலை-1 பதவிக்கான சாதாரண நிலையில் ஊதிய விகிதம் அரசாணை எண்.303நிதித்(ஊகு) துறை, நாள்.11.10.2017-ல்  குறிப்பிடப்பட்டுள்ள ஊதியவிகிதத்தின்படிஅமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
4. தேர்வாளர் வேறு அரசுப் பணியிலோ, அரசுச் சார்ந்த நிறுவனங்களிலோ தற்போதுபணியாற்றிக் கொண்டிருப்பின், உரிய அலுவலரிடமிருந்து முறையானபணிவிடுப்புச்சான்று பெற்று அதனை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் முன்னிலைப்படுத்தி பணியில் சேருதல்வேண்டும்.
5. உயர்நிலைப் பள்ளிப் படிப்பில் தமிழை மொழிப்பாடமாகவோ அல்லது கற்பிப்பு மொழியாகவோ பயிலாதவர்களுக்கும், தமிழ் அல்லாது பிறமொழிகளை பட்டப்படிப்பில் பயின்றவர்களுக்கும் அல்லது பட்டப்படிப்பில் பிறமொழிபயின்றவர்கள் தமிழ்வழி பாடத்திற்கென ஆசிரியர் தேர்வுவாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பின், அவர்கள் தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்மொழி இரண்டாம் நிலைத் தேர்வில், பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளுக்குள்தேர்ச்சி பெறவேண்டும்.
6. தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணிவிதி 8ன்படி பணிவரன்முறைப்படுத்தப்படும் நாள் முதல் தொடர்ச்சியான மூன்றாண்டு காலத்திற்குள் இரண்டாண்டு காலம் தகுதிகாண் பருவத்தை முடிக்கவேண்டும்.
7. மாற்றுத் திறனாளி (Physically Handicapped) தேர்வாளர் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனிவேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட மருத்துவக்குழுவிடமிருந்து உடல்நலத் தகுதிச்சான்று பெற்று அளித்தல்வேண்டும்.
8. தேர்வாளர் பணியில் சேர்ந்த பின்னர் புதியபங்களிப்புஓய்வூதியத்திட்டத்தின்கீழ்" (Contributory Pension Scheme) கொண்டுவரப்படுவார்.
9. தனியர் எந்தப்பாடத்திற்கான முதுகலை ஆசிரியர் பதவிக்குத் தெரிவு செய்யப்படுகிறாரோ அப்பாடத்திற்கான கல்வித்தகுதிகளை பெற்றுள்ளாரா என்று சரிபார்க்குமாறும் தேர்வாளரதுபத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புமற்றும் பட்டயச்சான்றுகளின் உண்மைத்தன்மை அறியவும், பிறமாநில பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும்  பட்டயச் சான்றுகள் பெற்றிருப்பின், அவற்றை மதிப்பீடுசெய்யவும், உரிய நடவடிக்கைகளைத் தலைமையாசிரியர் உடன் மேற்கொள்ளவேண்டும்.
10. மேலும் நியமனம் பெற்றுள்ள தனியர் முன்னிலைப்படுத்திய கல்விச்சான்றிதழ்கள் உண்மையானவை அல்ல என்றோ, விதிகளின்படி மதிப்பீடு செய்ய இயலாதவை என்றோ கண்டறியப்பட்டால், தனியருக்கு வழங்கப்பட்ட நியமனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி  இரத்துசெய்யப்படும்.
11. தேர்வாளர் பணியில்சேரும்போது அன்னார் முதுகலை ஆசிரியர் பணிக்குரிய  கல்வித் தகுதியினைப் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு பதிவு அட்டையினை இரத்து செய்யும் பொருட்டு சார்ந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்  அதன்  விவரத்தை இவ்வியக்ககத்திற்கு உடன் அனுப்பவேண்டும்.
12. தேர்வாளர் பற்றிய தகவல் ஏதேனும் இயக்குநருக்கு தெரிவிக்கும்போது ஆசிரியர் தேர்வுவாரியத்தால் அளிக்கப்பட்ட வரிசை எண் மற்றும் ஆண்டு தவறாது குறிப்பிடுதல் வேண்டும். மேலும் அன்னார் பணியேற்ற தேதியை உடன் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சமர்ப்பிக்கவேண்டும்.
13. பணியில் சேர்ந்துள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சார்ந்த விவரங்களை உடன் கல்வித்தகவல் மேலாண்மையில் (EMIS) சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
14. இந்த நியமன ஆணை கிடைக்கப் பெற்ற தேர்வாளர் 7 தினங்களுக்குள் பணிநியமனம் பெற்ற பள்ளியில் தவறாமல் பணியில் சேரவேண்டும்அவ்வாறு மேற்குறிப்பிட்ட தினங்களுக்குள் பணியில் சேரவில்லை எனில் நியமனஆணை தாமாகவே ரத்தாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.