Header Ads

Header ADS

அட்சயபாத்திரம் என்னும் சிறப்புத்திட்டம் பள்ளியில் அறிமுகம்





திருச்சி மாவட்டம் , தென்னூர்,  *சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில்* இன்று திருச்சியில் முதல்முறையாக *அட்சயபாத்திரம்* என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமானது பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் தினமும் வழங்குவதாகும். தமிழக அரசின் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விதவிதமான வகையில் சத்துணவு தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.



இதனுடன் கூடுதல் காய்கறிகளை பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் பெற்று அவற்றை சத்துணவுடன் சேர்த்து கூடுதல் ஊட்டச்சத்து  பெறுவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டமானது பள்ளிமாணவர்களின் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் நடைபெறும்.   இப்பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக காலை உணவுத் திட்டமும் இங்கு செயல்படுத்தப்படுகிறது.  இதில் சுமார் 150 மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர் என்பது  குறிப்பிடதக்கது.   திருச்சி சிப்காட் வட்டாட்சியர் கோகுல் மற்றும் சைன்திருச்சி நிறுவனர் மனோஜ் தர்மர் இத்திட்டத்தினை துவக்கி வைத்தனர். மேலும் இவ்விழாவில் திருச்சி நகர சரக வட்டாரக்கல்வி அலுவலர் அருள்தாஸ்நேவிஸ், ஜெயலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம், நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிராஜுதீன், யோகா பயிற்றுனர் காயத்ரி, ஆசிரியை சரண்யா, உமா, சகாயராணி, உஷாராணி உள்பட பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.