Header Ads

Header ADS

தாயைப் போலவே தந்தைக்கும் 164 நாட்கள் பேறுகால விடுப்பு

Image result for பேறுகால விடுப்பு



தாயைப் போலவே தந்தைக்கும் 164 நாட்கள் பேறுகால விடுப்பு அறிவித்த பின்லாந்து அரசு..!

குழந்தை பிறப்பிற்கு பின் தாய்க்கு அளிக்கப்படுவது போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.
 
பொதுவாக குழந்தைகள் வளர்ப்பு என்றாலே எல்லா பொறுப்புகளும் பெண்களுக்குத்தான் என்ற எண்ணம் உண்டு. ஆனால் இந்த எண்ணத்தை உடைத்திருக்கிறது பின்லாந்து அரசு. பின்லாந்தில், முற்றிலும் பெண்களை தலைமையாக கொண்ட கட்சிகளின் கூட்டணி ஆள்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 34 வயதான சன்னா மரின் பின்லாந்து பிரதமராக பதவியேற்றார். சில வாரங்களுக்கு முன்பு உலக பொருளாதார கூட்டமைப்பில் பேசிய சன்னா மரின், பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில், தங்கள் நாட்டில் பேறுகால விடுப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.

அதன்படி, குழந்தை பிறப்புக்கு பின், தாயை போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. இந்த 164 நாட்கள் விடுப்பில் தாயோ அல்லது தந்தையோ 69 நாட்கள் விடுப்பை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளலாம். இதுவே தந்தை, தாய் இருவரில் ஒருவர்மட்டுமே இருக்கும்பட்சத்தில் அவருக்கு 3‌28 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை வளர்ப்பில் இரு தரப்புக்குமே சமமான பொறுப்பு இருப்பதை உணர்த்தும் வகையில் ஆண்களுக்கான விடுப்பு நாட்களை அதிகரித்துள்ளதாக பின்லாந்து அரசு கூறியுள்ளது

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.