முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை - 11-02-2020
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்துார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்ளுக்கு முதன்மைக் கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு , அவ்வலுவலங்களுக்கு தலா ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் வீதம் 5 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உட்பட பிற அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதற்கான செலவினங்களுக்கு ஒப்பளிப்பு வழங்கி மேலே இரண்டாவதாகப் படிக்கப்பபட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன .
2 . பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III - ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது .



No comments
Post a Comment