Header Ads

Header ADS

School Morning Prayer Activities -23.01.2020


School Morning Prayer Activities -22.01.2020


திருக்குறள்


அதிகாரம்:அவாவறுத்தல்

திருக்குறள்:361

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
 
விளக்கம்:

எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

பழமொழி

Business  neglected is business  lost.

 பாராத செயல்   பாழாகும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .

2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.

பொன்மொழி

வளர்ச்சி என்ற சொல் தனிமனித வாழ்க்கையில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துகிறது..

-------மார்க்கோனி

பொது அறிவு

1.தேசிய ஒருமைப்பாட்டு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 நவம்பர் 19

2.தேநீரில் அடங்கியுள்ள கரிம அமிலம் எது?

 டானிக் அமிலம்

English words & meanings

Waltzing - to dance a waltz. சுழற்சி நடனமாடுகிற.

Weeded - to remove weeds, களை எடுக்கப் பட்ட.

ஆரோக்ய வாழ்வு

மஞ்சளில் உள்ள 'குர்குமின்' என்ற உட்பொருள் சிறந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவது மட்டுமின்றி புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்டாகவும் செயல்படுகிறது.

Some important  abbreviations for students

et al. -  et alii. (and other people)

ibid.  -ibidem. (in the same place)

நீதிக்கதை

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

ஏண்டா இன்னைக்கு குளிச்சியாஎன்றாள் அப்புவின் அம்மா.

நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான்.
வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.
அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார்.

ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

மறந்திட்டேன் சார்சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.

அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதாஎன்று கிண்டலாகப் பதில் சொல்வான்.

அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.
அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.
ஆனால் பையன்கள் இவனைஅழுக்குமாமாஎன்று அழைத்தனர்.

அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

டேய் குளிச்சிட்டுப் போய் படிடாஇது அப்புவின் அம்மா.
"குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மாஎன்பான் அப்பு.

பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.

மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.
அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.
விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.
அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்துஎன்றார் டாக்டர்.
அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.

தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராதுஎன்றார் டாக்டர்.
அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான்.
அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.
அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.
ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.

சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.
அடுத்தநாள் அவன் பள்ளிக்குபளிச்என்று வந்தான்.
"அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டாஎன்று ஒருவன் சொல்ல பையன்கொல்லென்று சிரித்தனர்.
அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

நீதி : சுத்தம் சுகம் தரும்

அறிவியல்
அறிவோம் அறிவியல்

உங்களுக்கு தெரியுமா?
* தேனீக்களுக்கு 6 கால்கள் 5 கண்கள் உண்டு
* ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு கிடையாது
* ஒரே தேன் கூட்டில் 50,000 தேனீக்கள் வரை வாழும்

இன்றைய செய்திகள்

23.01.20

2020-21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

சிறப்பு உதவித் தேவைப்படும் குழந்தைகளுக்கு மட்டும் தேர்வின் போது கால்குலேட்டரைப் பயன்படுத்திக் கொள்ள சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது.

மலைப்பள்ளத்தில் உருண்டு விழுந்த காரிலிருந்து வெளியே வந்து மேலும் மூன்று உயிர்களைக் காப்பாற்றிய இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவி அலைகாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா தோல்வி கண்டு வெளியேறினார். ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Today's Headlines

🌸 The Teacher Selection Board has released its schedule for the year 2020-21.  Accordingly, the Teacher Eligibility Test will be held on June 27 and 28.

 🌸The CBSE has allowed the use of the calculator for children with special needs during the exam ,

 🌸Alaika, a student from Himachal Pradesh, who got out of a car that crashed into a hillside and saved three lives, has been given the National Award.

 🌸 Indian team have  announced for 3 ODI series against New Zealand.

 🌸 Maria Sharapova who was the leading player lost  the first round of the Australian Open Grand Slam.  In the first round of the men's category  Spanish player Rafael Nadal progress to the second round.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.