Header Ads

Header ADS

PGTRB 2019 - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக தெரிவு பட்டியலை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பு ஆணை நகல்!-PDF FILE



முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2019 - வேதியியல் பாடத்திற்கான தேர்ந்தோர் தெரிவு பட்டியலை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவு ஆணை!
 
ORDER :

In view of the above discussion, this Court is of the considered opinion that the Provisional Selection List, prepared by the third respondent, has to be reconsidered and, in lieu thereof, a fresh Provisional Selection List prepared.

While preparing the fresh Provisional Selection List, the third respondent is directed to fit in all the candidates under General Turn, only based on their merit and ranks, irrespective of their http://www.judis.nic.in 10/12 W.P.No.34099/2019 & Batch community, and, when it comes to the selection of candidates belonging to a particular community, who do not fall within the merit/rank, they should be considered under the community quota, based on the marks fixed for that community. While doing so, the backlog vacancies must be first accommodated and, only thereafter, the current vacancies must be filled up. With the said clarity in mind, the third respondent shall proceed to prepare the fresh Provisional Selection List for the posts of P.G. Assistants in Chemistry.

This exercise shall be done within a period of two weeks from the date of receipt of a copy of this order and the fresh Provisional Selection List shall be published in the Board's Website.
 
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய வேதியியல் பாட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி ரத்து செய்தது. இடஒதுக்கீட்டு விதிகளை முறையாக பின்பற்றி  புதிய நியமனப் பட்டியலைத் தயாரிக்கும்படியும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ள நீதியரசர், வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை  ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்கும்படி 2 வாரத்துக்குள் சமர்பிக்க தேர்வு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது.
 
பின்னடைவுப் பணியிடங்களையும், நடப்புக் காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்புக் காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவுப் பணியிடங்களையும், தொடர்ந்து  நடப்புக் காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும் என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையின்படி முதுநிலை ஆசிரியர் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34 பணியிடங்களும், பட்டியலினத்தவருக்கு 5 இடங்களும் கூடுதலாக கிடைக்கும்.

  PGTRB 2019 - Selection List Cancel Judgement Order Copy - Download here...

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.