ரத்தாகிறதா குரூப் 4 தேர்வு? இன்று ஆலோசனை!!
2019 செப்டம்பர் மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் , 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர் . தேர்வு முடிவுகள் 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன .
தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதில் முதல் 100 இடங்களை ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங் களில் தேர்வு எழுதியவர்கள் பிடித்தனர் என தெரியவந்தது . இதையடுத்து நடந்த விசாரணையில் , தேர்வில் முறைகேடு பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன .
சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி , முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள் , அரசு ஊழியர்கள் , தேர்வர்கள் , புரோக்கர்கள் என 14 பேரை கைது செய்துள்ளனர் . முறைகேட்டில் தொடர்புடைய 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வந்தது .
இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வருவதால் , தகுதிநீக்கம் செய்ய வேண்டியவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் எனக் கூறப்படுகிறது . இதனால் , ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது குறித்து , தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது . இதுகுறித்து முக்கிய முடிவு எடுப்பது தொடர்பாக , அமைச்சர் ஜெயக்கு மார் தலைமையில் அரசின் தலைமைச் செயலகம் அல்லது தேர்வாணையம் அலுவலகத்தில் இன்று ( புதன்கிழமை ) ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது .
No comments
Post a Comment