Header Ads

Header ADS

School Morning Prayer Activities - 05.12.2019


 School Morning Prayer Activities - 04.12.2019


இன்றைய திருக்குறள்
குறள்எண்- 187

அதிகாரம் : புறங்கூறாமை

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
 நட்பாடல் தேற்றா தவர்.

மு. உரை:

மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
 
கருணாநிதி  உரை:

இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

மாணவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அறிவைத் தேடி சென்றனர். ஆனால் தற்போது மாணவர்களைத் தேடி அறிவு வருகிறது.
 - அப்துல்கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்

A little stream will run a light mill
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words
 
1. Bent - விருப்பம்
2. Bet - பந்தயம்
3. Billow - பேரலை
4. Biography - வாழ்க்கை வரலாறு

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. வைட்டமினுக்குவைட்டமின்என பெயரிட்டவர் யார் ?

 பங்க்

2. வளிமண்டலத்தில் அதிகம் காணப்படும் வாயு எது ?

 நைட்ரஜன்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. பூமியிலே பிறக்கும். புகையாய்ப் போகும், அது என்ன ?

 பெட்ரோல்

2. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான். அவன் யார் ?

 இளநீர்

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. She is very cute.
2. A new teacher came to my class today.
3. she told us many stories.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

குதிரைவாலி

🌾 குதிரைவாலி புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிராகும்.

🌾 இவை நம் மூதாதையர் காலத்திலிருந்து உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

🌾 இந்த சிறுதானியம் உலகில் இந்தியா, பாகிஸ்தான், நோபாளம், சீனா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சீனா மற்றும் ஜப்பானில் நெற்பயிர் உற்பத்தி இழப்பு ஏற்படும் போது குதிரைவாலி மாற்றுப்பயிராக பயிரிடப்படுகிறது.

🌾 தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர், விருதுநகர் மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

🌾இதன் அரிசியை வேக வைத்தும், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடும் பழக்கம் உள்ளது.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

கழுதையின் மேல் பயணம்

ஒரு முறை விவசாயி ஒருவர் தன்னுடைய கழுதையை விற்று விட முடிவு செய்து அருகிலுள்ள கிராமத்துக்குத் தன் மகனுடன் சென்றார். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டே செல்வதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் இவர்களைப் பார்த்துச் சிரித்தார். அந்த வழிப்போக்கர் கழுதை சும்மா தானே வருகிறது. அந்தக் கழுதையின் மீது யாராவது ஒருவர் ஏறிச் செல்லலாமே என்றார். சரி என்று அந்த வியாபாரி தன் மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார்.

சிறிது தூரம் சென்றதும் எதிரே வந்த மற்றொருவர், ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்துவிட்டு, நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா? என விவசாயி மகனைப் பார்த்து கேட்டார். உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச்செய்தான். இன்னும் சிறிது தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் தந்தையை பார்த்து ஏனய்யா இந்தச் சின்னப் பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிப்பது சரியா? எனக் கேட்டார்.

தந்தையும் மகனும் என்ன செய்வது என்று பலவாறாக யோசித்து முடிவில் இருவருமே அந்த கழுதையின் முதுகில் ஏறிக் கொண்டனர். சிறிது தூரம் சென்றதும் இரண்டு பேரும் கழுதையின் மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், அடக் கொடுமையே இந்த வாயில்லா பிராணியை இப்படியா துன்புறுத்துவார்கள். இவர்களுக்கெல்லாம் இரக்கமே இல்லையா? என எள்ளி நகையாடினர்.

உடனே இருவரும் கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள். மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும், கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்வது தான் சிறந்தது என்று கழுதையின் கால்களைக் கட்டியபிறகு, ஒரு கொம்பில் அதைக் கட்டி அதைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர்.

கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீதிருந்த ஒரு பாலத்தை அவர்கள் கடக்க முயன்றபோது இருவரும் மிகவும் சிரமப்பட்டுக் கழுதையைத் தூக்கிக் கொண்டு வரும் வினோதக் காட்சியை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்த குழந்தைகள் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். பெரிய சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கழுதை துள்ளிக்குதிக்க தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவி கழுதை ஆற்று நீரில் தூக்கி எறியப்பட்டது! கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அக்கழுதையால் நீந்த முடியாமல் இறக்க நேரிட்டது.

நாம் சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டு நடந்ததால்தான் தங்களுக்கு அடிபட்டதோடு மட்டுமல்லாமல் கழுதையும் இறந்து போய்விட்டது என்று கவலைப் பட்டபடியே நடந்து சென்றனர்.

நீதி :
பிறர் கூறும் கருத்தைக் கேட்க வேண்டும். ஆனால் முடிவை சுயமாக சிந்தித்து எடுக்க வேண்டும்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ...நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சட்டவிரோதமாக குடியேறியவர்களை மாநில அரசுகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🔮சூடான் நாட்டில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 18 பேர் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.

🔮காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர்

🔮உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய பாடம் அல்ல, விருப்ப பாடம் தான் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

🔮சென்னையில் வடகிழக்கு பருவ மழை 14 செமீ குறைவாக பெய்து உள்ளது. தமிழகம் முழுவதும் இயல்பை விட அதிகமாக பெய்து உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.

🔮தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா நேற்று ஒரே நாளில் தடகளத்தில் 4 தங்கம் உள்பட 10 பதக்கங்களை அள்ளியது. இந்திய கைப்பந்து அணிகள் தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

🔮இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணம்: ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல, சாலையின் தரமும் காரணம்...உயர்நீதிமன்றம் கண்டிப்பு.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.