School Morning Prayer Activities - 02.12.2019
செய்திச்சுருக்கம்.
🔮தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.மிக
கனமழை பெய்யும் என்பதால் ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
🔮எகிப்து, துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும்
என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
🔮டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி
4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி உலக குரூப் சுற்றுக்கு தகுதி
பெற்றது.
🔮தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் இருநாட்கள் மிதமான மழை
நீடிக்கும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த
ஆண்டில் பருவமழை 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
🔮தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி
வைப்பதாக அறிவிப்பு.
இன்றைய திருக்குறள்
குறள்எண்-221
அதிகாரம் : ஈகை
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
மு.வ உரை:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
கருணாநிதி உரை:
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈ.கைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத்தவிர வேறொரு ஆயுதம் இல்லை.
- மகாத்மா காந்தி
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
A good face
needs no paints
அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Bank - கரை/ வங்கி
2. Barley - வாது கோதுமை
3. Barn - தானியக் களஞ்சியம்
4. Barrel
- பீப்பாய்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. இந்தியாவில் மேகம் சூழ்த மாநிலம் எது ?
மேகாலயா
2. மாலை விண்மீன் என்று அழைக்கப்படும் கிரகம் எது ?
வீனஸ் (வெள்ளி )
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1. கண்ணில் தென்படுவான். கையில் பிடிபட மாட்டான். அவன் யார் ?
புகை
2. வெயிலில் மலரும், காற்றில் உலரும் - அது என்ன ?
வியர்வை
✡✡✡✡✡✡✡✡
Daily
English
1. The cat
is under the table
2. The lemon
is in the glass.
3. I clean
my garden.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
திணை
🌾 திணை சிறுதானிய பயிர் வகைகளில் ஒன்றாகும்.
🌾 பண்டைக் காலத்திலிருந்தே திணை உணவு தானியமாக பயிரிடப்படுகிறது. இது ஐரோப்பாக் கண்டத்தில் கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில் முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.
🌾 இந்தியாவில் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் தானியமாக பயிரிடப்படுகிறது.
🌾அமெரிக்கா, மத்திய
ஐரோப்பாவில் தீவனப் பயிராக வளர்க்கப்படுகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
ஒரு
நாள் ஓநாய் ஒன்று அதிகமான தாகத்துடனும், பசியுடனும் தவித்துக் கொண்டு இருந்தது. அதனால் அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அதனை கண்டு ஓநாய்க்கு கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே என்றது. ஆட்டுக்குட்டி மிகுந்த பயத்துடன் நான் உங்களுக்குக் கீழ்ப் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறேன். நீங்களோ மேல் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறீர்கள். அப்படியிருக்க தண்ணீர் எப்படி கலங்கும் என்றது.
ஆறு
மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். வாயாடியதற்காக அவருடைய தோல் அன்று உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய் என்று கோபமாகச் சொல்லியது ஓநாய். ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது. ஐயா! நான் சொல்வதை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை என்று மிகப் பணிவாகச் சொல்லியது.
ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இப்போது நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்கு எல்லாம் சேர்த்து தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டியைக் கொன்றுத் தின்றது ஓநாய்.
நீதி
:
கெட்டவர்கள் ஒருபோதும் இரக்கப்பட மாட்டார்கள்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
No comments
Post a Comment