Header Ads

Header ADS

SBI ATM கார்டுகள் இனி செல்லாது! அதிரடியாய் அறிவித்த ஸ்டேட் பாங்க்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!



நாடு முழுவதும் வங்கியின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பது மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வருகிறது. அதே போல், ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது மறைமுகமாக கேமரா பொருத்தி பின்கள் மற்றும் கார்டின் விவரங்களை அறிந்து எளிதாக பணம் திருடப்படுகிறது.
 
இதனை தடுப்பதற்காக அனைத்து வங்கிகளும்,இஎம்வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்நிலையில், மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள் எளிதாக ஹேக் செய்ய முடியும் என்பதால், பாதுகாப்பு கருதி எஸ்பிஐ ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படிசிப் பொருத்தப்படாத அனைத்துக் கார்டுகளையும் டிசம்பர் 31ஆம் தேதியோடு முடக்கவுள்ளதாகவும், அதன் பின்பு பழைய சிப் பொருத்தப்படாத கார்டுகளை ஏடிஎம் மற்றும் எந்தவிதப் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த முடியாது எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
 
புதிய ஏடிஎம் கார்டுகளை வாங்க வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது எஸ்பிஐ யோனோ ஆப், ஆன்லைன் பேங்கிங் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் முன் உங்களது வீட்டு முகவரி சரியாக உள்ளதா என்பதையும் சரிப்பார்த்துக் கொள்ளவும். மேலும் வங்கிகளில் நேரடியாகச் சென்று விண்ணப்பிப்பவர்கள் நீங்கள் எந்த கிளையில் கணக்குத் தொடங்கினீர்களோ அங்கு சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது என எஸ்.பி. தெரிவித்துள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.