Header Ads

Header ADS

அரையாண்டு விடுமுறையில் தேர்தல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி


 Image result for election duty


அரையாண்டு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், டிச., 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில், அரசுப்பள்ளி ஆசிரியர்களில், 90 சதவீதம் பேர் பயன்படுத்தப்படுவது வழக்கம். அரசுப்பள்ளிகளுக்கு, டிச., 24 லிருந்து, ஜன., 2 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடுவது வழக்கம். விடுமுறை நாட்களில் வெளியூர் செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு
ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணிக்காக முன்தினமே ஓட்டுச்சாவடிக்கு செல்லுதல், பயிற்சி, பணிக்கான ஆணை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன. இதனால், அரையாண்டு விடுமுறையை அனுபவிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.