Header Ads

Header ADS

School Morning Prayer Activities- 27-11-2019


School Morning Prayer Activities- 26-11-2019

 
திருக்குறள்:329

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

விளக்கம்:

பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிவான பிறவிகளாகவே கருதும்.
 
பழமொழி

A man of course never wants  weapons.

 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி

முதிர்வு என்பது வயதால் வந்தாலும் மனதளவில் வரவில்லை என்றால் அம்முதிர்வு அளவீட்டில் இடம் பெறுவதில்லை...

------ புட்லிசர்

பொது அறிவு

1. விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் சார்பாக ஆஜரான வக்கீல் யார்?

 ஜவகர்லால் நேரு.

2. இந்தியாவில் மிக இளவயதிலேயே பிரதமராக இருந்தவர் யார்?

 ராஜீவ் காந்தி.

English words & meanings

Parasitology – study of parasites. ஒட்டுண்ணியியல். ஒட்டுண்ணிகள், அவற்றின் வழங்கிகள் அவற்றுக்கு இடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆராயும் ஒரு துறை ஆகும்.

Plumber -  a person who fits and repairs the pipes. குழாய்-தொட்டி முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர்.

ஆரோக்ய வாழ்வு

சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.

Some important  abbreviations for students

ETA - Estimated time of arrival

ETD - Estimated time of departure

நீதிக்கதை

வேப்பமரமும்... சிறுவனும்

வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான். அதைக் கண்ட மரம் தம்பி ஏன் அழறே என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை. காலையில் எழுந்ததுமே முதலில் பல் தேய்த்துவிட்டு வா என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி என்று கண்டிக்கிறார். பின் குளித்து முடித்து பசிக்கலை என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.

பள்ளிக்கு வந்தாலோ பாடம் படிக்கலைன்னும், பாடம் சொல்லிக் கொடுக்கும்போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க. எல்லாருமே என்னை நாள் முழுக்க திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை என்றான் அழுது கொண்டே.

வேப்பமரம் என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா? என்றது. ... இலை மட்டுமா உன் இலை, குச்சி எல்லாமே ஒரே கசப்பு. சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன். ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.

நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன். அது போல் பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது. ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.

நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பப்படுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.

புதன்
கணக்கு & கையெழுத்து

உரி அடுக்கு பானை

எங்கள் கிராமம் மண்பாண்டங்கள் நிறைந்த ஊர். எல்லோருடைய வீட்டிலும் உரி அடுக்கு பானைகள் இருக்கும் .சுமார் 70 வீடுகள் உள்ள கிராமம். உரி சுமார் 4 அடுக்கு உடையது . எனினும் 9 வீடுகள் ஆளில்லை. 17 வீடுகள் உரி அடுக்கு பயன்படுத்துவதில்லை. எனில்

கேள்வி :
(1)உரி அடுக்கு பயன்பாட்டில் உள்ள வீடுகள் எத்தனை.??
(2) எத்தனை உரி அடுக்கு பானைகள் உள்ளன???

விடை:
(1) 70 - (9+17)
70 - 26= 54

(2) 54 × 4 = 216

கையெழுத்துப்பயிற்சி - 20




இன்றைய செய்திகள்

27.11.19

* முதியோர்களின் அனைத்துத் தேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவிப்பதற்கு தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

தொலைபேசி எண் : 044 - 24350375

செல்பேசி எண் : 93612 72792

* இஸ்ரோவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள், அமெரிக்காவின் 13 நானோ செயள்கைக்கோள் ஆகியவற்றைச் சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. இதற்கான 26 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை தொடங்கியது.

* தவளைகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அமெரிக்கப் பள்ளிகளில் ஆய்வுக்கு பயன்படுத்தப்பட வருகிறது சிந்தடிக் தவளை. இதனை மறுசுழற்சி செய்தும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

* தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* திருப்பதியில் நடந்து முடிந்த தேசிய தடகள விளையாட்டு போட்டியில் தமிழகத்திற்கு 5 தங்க பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 13 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

* ஸ்காட்டிஷ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றாா் இந்திய இளம் வீரா் லக்ஷயா சென். இது ஓரே ஆண்டில் அவா் வெல்லும் 4-ஆவது பட்டமாகும்.

Today's Headlines

* To inform about the elder citizens needs and problems Tamil Nadu Government released help line numbers
Telephone number - 044 - 24350375
Mobile number - 9361272792.

🌸 With ISRO'S Cartochat - 13 and America's Nano 13 Satellite PSLV - C47 will take off into space by tomorrow. The 26 hours countdown started today morning.

🌸 To protect the Frog species a new synthetic frog is invented and started to be used in the American schools. We can recycle this frog also.

🌸 In next 24 hours there will be heavy rain in three districts says Chennai Metroligical Department.

🌸In Scottish open Tennis match Indian Young player Lakshaya Sen won the match. This is her fourth win.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.