Header Ads

Header ADS

School Morning Prayer Activities- 14-11-2019


School Morning Prayer Activities- 13-11-2019


இன்றைய செய்திகள்


14.11.19

அதிக மழையின் காரணமாக வெள்ளத்தில் மிதக்கின்றது வெனிஸ் 
நகரம்.

*மாணவர்களின் போராட்டத்தை அடுத்து தில்லி ஜவஹர்லால் பல்கலை.,
 கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டது.

*சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகத்தை கோயில் மணி அடித்து திறந்து வைத்தார் முதல்வர்.

இலந்தைக்கரையில் மகதநாட்டு வெள்ளி நாணயம்!’- கீழடியைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காளையார்கோயில் பகுதியிலும் தொல்லியல் 
பொருட்கள் கிடைத்து வருகிறது.

*பந்தை சேதப்படுத்தியதால் நிக்கோலஸ் பூரன் அடுத்த நான்கு போட்டிகள் 
ஆட தடை!

*அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் பெடரர் – ஜோகோவிச் மோதவுள்ளனர்.
 

திருக்குறள்

அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:319

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

விளக்கம்:

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

பழமொழி

He that commits faults thinks everyone  speaks of it.

குற்றம் செய்த நெஞ்சம் குறுகுறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. சோம்பல் என்னை வறுமைக்கு வழிநடத்தும்.

2. எனவே தேனீ போலும், எறும்பு போலும் சுறுசுறுப்பாக இருப்பேன்.

பொன்மொழி

அறிவியல் என்பது அனுபவம் ,அதனை நல்ல செயல்களுக்கு பயன்படுத்த மனிதம் செயல்படவேண்டும்..

------அப்துல் கலாம் அவர்கள்

பொது அறிவு

1. ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட ஆண்டு எது?

 1908.

2.ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அனுமதிக்கப்பட்ட ஆண்டு எது?

 1908

3. ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதன்முதலில் கலந்து கொண்ட ஆண்டு எது?

 1948

English words & meanings

Forestry - a study of forest it's management and resources. வனவியல். இது காடுகளையும், அதோடு சார்ந்த வளங்களையும் மேலாண்மை செய்வதற்கான அறிவியல்.

 Fable - a fictional story. கட்டுக்கதை

ஆரோக்ய வாழ்வு

ஒரு கப் கருப்பு டீயானது நம் உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

Some important  abbreviations for students

FAQ - Frequently Asked Questions

TBA - To be announced

நீதிக்கதை

எலியும் பாலும்

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டும் தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.

இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேலே ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின. அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்தபோது, கீழே இருந்த எலி கத்தியது போதும்! நான் பால் குடிக்க வேண்டும்

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது. இதைக்கண்ட கீழே இருந்த எலி, நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும் என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.

வியாழன்
அறிவியல்

அறிவோம்பெறுங்கள்.

நிலை மின்னியல்

தேவையான பொருட்கள் : பலூன், tissue paper

செய்முறை : பலூனை ஊதி கட்ட வேண்டும். பின் அந்த பலூனை நமது தலையில் அதாவது முடியில் நன்கு தேய்க்க வேண்டும். பலூனை தூக்கும் போது முடியும் ஒட்டிக் கொண்டு மேலே வரும். மறுபடியும் தலையில் பலூனை தேய்த்து மிகச் சிறிய துண்டுகளாக ஆக்கப்பட்ட tissue பேப்பர் மீது கொண்டு செல்லும் போது அவைகள் பலூனில் ஒட்டிக் கொள்ளும்.




அறிவியல் :   இரு மின் கடத்தா பொருட்கள் ஒன்றொடொன்று உராயும் போது நிலை மின்சாரம் உற்பத்தி செய்யும் அவைகள் சிறு பொருட்களை ஈர்க்கும்.
இதை குறித்து இன்னும் விவரமாக அறிய
Static Electricity என்று you tube லும், Static Electricity facts in tamil ன்றுஇணையத்திலும் தேடி படித்து பயன் பெறுங்கள்.


Today's Headlines

🌸 Venice City flooded due to heavy rainfall.

 🌸Jawaharlal University in Delhi withdraws fee hike after student protest.

 🌸 Chief minister  opened the smart walkway complex at Pandi Bazaar, Chennai.

 🌸Archaeological items such as Magadha's silver coin in Ilanthaikarai  of ​​Sivagangai district  Kalaiyar Koil following the  kizhadi.

 🌸As Nicholas Pooran damaged the ball ,he was banned for next four matches.

 🌸Federer and Djokovic face off to qualify for the semifinals.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.