Header Ads

Header ADS

School Morning Prayer Activities- 06-11-2019


School Morning Prayer Activities- 05-11-2019

தொகுப்பு:

T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮 இந்தியா பல விஞ்ஞானிகளை உருவாக்கி உள்ளது நமக்கு 
பெருமையே என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

🔮கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் உள்ளது -ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை.

🔮பார்முலாகார் பந்தயம்இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் 6-வது முறையாக ‘சாம்பியன்.

🔮கொடைக்கானல் ஏரியில் போட் கிளப் மற்றும் தனியார் ஓட்டல்
 சார்பில் படகு சேவை நடத்த தடைஉயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.


🔮வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் 
மீன்பிடிக்க செல்லும் படகுகளுக்கு அனுமதி சீட்டு வழங்க வேண்டாம்
அமைச்சர் ஜெயக்குமார்.

இன்றையதிருக்குறள்

பொறாமையால் ஏற்பட்ட இழப்பு

குறள் :

அழுக்காறென ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

விளக்கம் :

மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளும் ஒருவன், தன் செல்வத்தையெல்லாம் இழந்து தீய வழிகளில் செயல்பட்டு சீர்குலைவான்.

கதை :

கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார்.

ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது.

மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது.

இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார்.

ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது.

மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.

நீதி :

பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

பிஞ்சு மனதில் பதியும் நற்கல்வி வாழ்வின் முழுமைக்கும் நல்லுணர்வு என்ற தன்மையின் தாக்கத்தைஉருவாக்கும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்.

பழய முறத்துக்கு சாணி, கிழ பொணத்துக்கு சோறு .

விளக்கம் :

எதற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி. அதாவது பழுதடைந்த முறம் சரி செய்ய சாணம் பூசி முழுகுவார்கள். அதுதான் பழய முறத்துக்கு சாணி என்பது. ஒரு வயதானவற்கு தேவை அவரை உயிரோடு வைத்திருக்க வேளா வேளைக்குச் சோறு. அதுதான் கிழ பொணத்துக்கு சோறு என்பது. இவ்வாறாக தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1.Cloves - கிராம்பு
2. Cardamom - ஏலக்காய்
3. Garlic - இஞ்சி
4. Chilly - மிளகாய்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?

அலகாபாத்

2.சிரிக்க வைக்கும் வாயு எது ?

நைட்ரஸ் ஆக்ஸைடு

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம்,
    எவரும் பார்க்க இயலாத கடிகாரம். அது என்ன?

 இதயம்

2. காது பெரிசு: கேளாது,
    வாய் பெரிது: பேசாது,
    வயிறு பெரிது : உண்ணாது,
           - அது என்ன?

  அண்டா

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

வெள்ளரிக்காய்

🍕 வெள்ளரிக்காய் ஒரு கொடிவகை தாவர வகைகளில் ஒன்று.

🍕 வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

🍕 இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு காயாகும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


HEADLINES

🔮Withdrawal limit for PMC bank depositors raised to ₹ 50,000

🔮Government working with RBI to revive real estate sector: Finance Minister Nirmala Sitharaman.

🔮 New Delhi:Dengue cases cross 1000-mark, over 230 fresh cases in 1 week.

🔮Kolkata to host IPL players' auction for first time on December 19.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.