Header Ads

Header ADS

பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகளில் நொறுக்குத்தீனிகளை விற்க தடை - ஆய்வு செய்ய பள்ளிகளுக்கு அரசு உத்தரவு






பள்ளி கேன்டீன்களிலும், பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகளிலும் நொறுக்குத்தீனிகளை விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பள்ளிகளில் உள்ள கேன்டீன்களில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நொறுக்குத்தீனிகளை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைச் சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத்தீனி மற்றும் அதுதொடர்பான விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்த மாதிரியான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறார்கள், அது தரமானதா என்பதை ஆய்வுசெய்ய பள்ளி நிர்வாகம் தனிக் குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தங்களது வளாகத்தில் உள்ள கேன்டீன்களில் என்னென்ன உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பன போன்ற விவரங்களை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறைக்கு பள்ளி நிர்வாகங்கள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.