Header Ads

Header ADS

பள்ளிகளில் 'புத்தக வங்கி' கல்வித்துறை வலியுறுத்தல்


 Image result for புத்தக வங்கி

 பள்ளிகளில் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகத்தை சேகரித்து, புத்தக வங்கி' துவங்க கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு முடிந்து, இரண்டாம் பருவ வகுப்புகள் நடந்து வருகின்றன.இதனால், அரசு இலவசமாக முதல் பருவத்திற்கென மாணவர்களுக்கு வழங்கியிருந்த பாடபுத்தகங்களில் சேதமில்லாத புத்தகங்களை சேகரித்து, பள்ளியிலேயே புத்தக வங்கி'யை ஏற்படுத்தி, அவற்றை பாதுகாக்க வேண்டும் என கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டில்லி பசுமை தீர்பாயத்தில் ஸ்ரீகாந்த் கடே என்பவர், மரங்களை பாதுகாக்க ஆண்டுதோறும் புதிய புத்தகம் தயாரிக்காமல், ஏற்கனவே பயன்படுத்தி சேதமாகாதவற்றை அடுத்து வரும் மாணவருக்கு வழங்கலாம் என தெரிவித்தார்.

இதை விசாரித்த தீர்ப்பாயம், பள்ளிகளில் புத்தக வங்கி ஏற்படுத்தி, சேகரித்து வைக்குமாறு தீர்ப்பளித்தது.காலாண்டு தேர்வு முடிந்ததால், முதல்பருவ பாட புத்தகத்தை சேகரித்து வருகின்றனர், என்றார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.