Header Ads

Header ADS

ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!





இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.

அவரது அறிவிப்பு!!

#ஆசிரியர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். கலந்தாய்வில்
தரையில் படுத்து உருண்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

#முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒழுங்காக நடந்து கொண்டாலே தமிழகம் கல்வியில் முன்னிலை பெற்றுவிடும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைப்பெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
 
ஐந்துக்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

ஐந்து மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிக்கு  ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் செலவாகிறது. பராமரிப்பு செலவும் அதிகமாகிறது.


அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள், சீருடைகள் அனைத்தும் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,

தேங்கி கிடக்கும் பழைய புத்தகங்கள், பயன்படுத்தாத புத்தகங்களை சேகரித்து டி.என்.பி.எல். நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.. சேகரித்து பழைய பேப்பர் கடைகளுக்கு போடுவதால் தேவையற்ற பிரச்சனைகள் எழுகிறது. இதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்..


மேசை, நாற்காலிகள் சிறு பிரச்சனை என்றாலும் அதை தூக்கி எரிந்துவிட வேண்டாம்.. கூடுமான வரை அதை சரிசெய்து மீண்டும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்..
 
 பயன்படுத்த முடியாத கணிணிகளில் என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து அவற்றை மாற்றி மறு உபயோகம் செய்யும் நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்..

இதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்களின் உதவிகளை கொண்டு செய்யலாம் என அறிவுரை..

தற்போதுள்ள பெற்றோர்கள் மாணவர்கள் விளையாடுவதை விரும்புவதில்லை, மாணவர்களுக்கு விளையாட்டு என்பது முக்கியம். பள்ளிகளில் உள்ள மைதானத்தை சரியான முறையில் பயன்படுத்தி மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும்.

தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை கவனத்தில் கொண்டு எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 மாணவர்களை உங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளை போல பேணி பாதுகாக்குங்கள் என அமைச்சர் பேசினார்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.