Header Ads

Header ADS

புதிய மாவட்டங்களுக்கு சி.இ.ஓ.,க்கள்பள்ளி கல்வித்துறை பட்டியல் தயாரிப்பு



Image result for promotion
தமிழகத்தில், புதிதாக துவக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு, சி...,க்கள் எனப்படும், முதன்மை கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
 
இதற்காக பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாவட்டங்களின் எண்ணிக்கை, 32ல் இருந்து, 37 ஆக உயர்ந்துள்ளது. தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார் என, ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்களுக்கு, கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற துறைகளிலும், மாவட்ட தலைமை அதிகாரிகளை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, பள்ளி கல்வித்துறையில், மாவட்ட தலைமை அதிகாரி பதவியான, முதன்மை கல்வி அதிகாரி பதவிகள், புதிதாக உருவாக்கப்பட உள்ளன.
 
இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுஉள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும், டி...,க்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், அனுபவம் மற்றும் பணி மூப்பு அடிப்படையில், ஐந்து அதிகாரிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர்கள் புதிய மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.