Header Ads

Header ADS

5, 8ம் வகுப்பு பொது தேர்வில் முதல் பருவ பாடங்கள் ரத்து?


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வில், நடப்பாண்டு மட்டும், முதல் பருவ பாடங்களை ரத்து செய்வது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசனையை துவக்கியுள்ளது.மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நடக்குமா; நடக்காதா என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சந்தேகங்கள் இருந்தன.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்வுக்கான கால அட்டவணையை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.பொதுத்தேர்வில் மூன்றாம் பருவ பாடங்கள் மட்டும் இடம் பெறுமா அல்லது மூன்று பருவ பாடங்களில் இருந்தும், கேள்விகள் இடம் பெறுமா என, தேர்வுத்துறை விளக்கவில்லை. முதல் பருவ புத்தகங்கள், தற்போது மாணவர்களிடம் இல்லை. 
எனவே, புத்தகம் இல்லாத பாடங்களுக்கு எப்படி தயாராவது என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு பாட புத்தகங்கள் தாமதமாகவே வழங்கப் பட்டுள்ளன. அதனால், பல பாடங்கள் நடத்தப்படவில்லை. இது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதனால், பொது தேர்வுக்கு, எந்த பாடங்களில் இருந்து வினாக்களை அமைக்கலாம் என, தேர்வுத்துறை ஆலோசனையை துவக்கியுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.