Header Ads

Header ADS

01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு ?



மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வு குறியீட்டு எண்ணின் அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்துவது வழக்கம்.

இதன்படி

விலைவாசி உயர்வு புள்ளிகளின் அடிப்படையில், 01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயரும் என கணிக்கப் பட்டுள்ளது.

4% அகவிலைப்படி உயர்வு உறுதியானால், தற்போது 17% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள், ஜனவரி முதல் 21% அகவிலைப்படி பெறுவார்கள்.

அரசு ஊழியர்களுக்கான, வருமான வரிக்கான கணக்கீடுகள் பிப்ரவரி மாதம் இறுதி செய்யப் படுவதால், இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் மார்ச் வரை நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் மாதம் முதல் ஊதியத்துடனும் வழங்கப் படும்.

மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அளித்ததும், அதனைப் பின்பற்றி மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும்.

எனினும், அகவிலைப்படி உயர்வு பற்றிய துல்லியமான கணக்கீடு ஜனவரி 31 ஆம் தேதி தான் தெரிய வரும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.