School Morning Prayer Activities- 24-10-2019
Prepared by
Covai women ICT_போதிமரம்
இன்றைய செய்திகள்
24.10.19
*தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி. ஒவ்வொன்றும் 325 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்க படும்.
* பிஎஸ்என்எல் 'இஸ் பேக்.' . 4ஜியிலும் இனி வரவிருக்கிறது. எம்டிஎன்எல்லுடன் இணைப்பு.
*ரன் ஃபார் யூனிட்டி’ மராத்தான் நிகழ்வுக்காக டெல்லி மெட்ரோ ரயில்
சேவை அக்டோபர் 31 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 31 இரும்பு மனிதர் பட்டேலின்
பிறந்த நாள்.
*தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: நேரம்
அறிவித்தது தமிழக அரசு.
*தென்ஆப்பிரிக்கா தொடரில் மூன்று சதங்களுடன் 500 ரன்களுக்கு மேல்
குவித்த ரோகித் சர்மா பேட்ஸ்மேன் தரவரிசையில் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
*இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39-வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.
திருக்குறள்:303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
விளக்கம்:
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
பழமொழி
Every path
has a puddle.
வீட்டுக்கு வீடு வாசப்படி.
இரண்டொழுக்க பண்புகள்
1. பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.
2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.
பொன்மொழி
நம்
முன் வாழ்ந்தவர்கள்,நம் பின்னால் வாழப் போகிறவர்கள் பற்றி நாம் அறிவது போல நம்மையும் அறிந்திருப்பவர்கள் இருப்பார்கள் ...எனவே நாம் பிறர் போற்ற வாழ்வோமாக...
நபிகள்
பொது
அறிவு
* உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கு
மேற்கொள்ளப்பட்டது?
பாபிலோன்
* ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்துள்ள நகரம் எது ?
லிதுவேனியா
English
words & meanings
Oncology -
the study and treatment of tumours and cancer. புற்று நோய் கட்டி பற்றிய ஆய்வு.
Opaque - not
transparent. ஒளி
புகா பொருள்.
ஆரோக்ய வாழ்வு
சுடுநீர் அல்லது தேநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் வலி குறையும்.
Some
important abbreviations for students
gov. -
governor.
govt. -
government
நீதிக்கதை
இரண்டு தேவதைகள்!
நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர்.
அது
நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர்.
அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.
அந்த
நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர்.
அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது.
இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.
தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது.
அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர்.
நீதி
:
பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
வியாழன்
அறிவியல் & கணினி
அறிவோம் அறிவியல்
பரப்பு இழுவிசை
மிளகுத்தூள் மற்றும் சோப். தேவையான பொருட்கள் :மிளகுத்தூள், திரவ சோப், நீர் மற்றும் ஒரு தட்டு.செயல்முறை தட்டில் முக்கால் பாகம் நீர் நிரப்பவும். அதில் மிளகுத்தூள் போடவும். பரவலாக மிதக்கும். இப்பொழுது திரவ சோப் சிறிது சேர்க்கவும். தற்போது ஒரு விரலால் நீரை தொடவும். மிளகுத்தூள் வேகமாக தட்டின் ஓரத்திற்கு சென்று விடும். காரணம் :சோப் சேர்ந்த உடன் நீரின் பரப்பு இழுவிசை மாறும் அதை விரும்பாத நீர் மூலக்கூறுகள் சோப் மூலக்கூறுகள் விட்டு விலகும் அப்போது மிளகுத்தூளும் அவற்றோடு சேர்ந்து விலகும்.
கணினி சூழ் உலகு
Today's
Headlines
🌸In Tamil Nadu Central Government is
going to start six medical colleges each costs 325 crores.
🌸BSNL will come again with flying
colours. It "is back with 4G Spectrum ". It will join hands with
MTNL.
🌸For the people to participate in
"Run for Unity" the metro Train of Delhi will start it's service on
October 31 at Morning 4 O'clock. October 31st is the birth date of "Iron
Man" Patel.
🌸 To protect environment TN government
announced that only two hours of crackers cracking for Deepavali. No more than
that alloted time.
🌸 In South Africa series player Rohit
who heaped the scores more than 500 and recorded three centuries climbed up the
list to 10th place.
🌸 Former Indian captain Sourav Ganguly
took the office of the Director for the Indian Cricket Council.
No comments
Post a Comment