School Morning Prayer Activities- 19-10-2019
இன்றைய செய்திகள்
19.10.19
*மாசற்ற சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
என்பதை நோக்கமாகக் கொண்டு, கடந்த 400 நாள்களில், 27,046.7 கி.மீ தூரம் வரை சைக்கிளில் பயணம் செய்து சாதனை
படைத்துள்ளார் கரூரைச் சேர்ந்த தங்கவேல்.
*நெல்லை-சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரெயில்கள் விடப்படும் என
ரயில்வேதுறை அறிவிப்பு.
*இளைய தலைமுறையினரிடம் தொல்லியலை அறிந்துகொள்ளும்
ஆர்வத்தை உருவாக்க வேண்டும்: அக்.19 சர்வதேச தொல்லியல் நாள்.
*பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு.
*விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு,
புதுச்சேரி உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
திருக்குறள்
அதிகாரம் : வாய்மை
திருக்குறள்:299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
விளக்கம்:
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
பழமொழி
Anything valued where it belongs.
எதுவும் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் மதிப்பு.
இரண்டொழுக்க பண்புகள்
1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்
2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
எந்தக் குடும்பத்தில் இருள் இருக்கிறதோ அங்குதான் வெளிச்சம் தேவை... கல்வியும் வெளிச்சமும் ஒன்றேனப் படும்
---- காமராசர்
பொது
அறிவு
1. பற்களைப் பற்றிய அறிவியலின் பெயர் என்ன?
டென்டாலஜி
2.உலகிலேயே அதிகமாக காணப்படும் ரத்த வகை எது?
'O'ரத்த வகை
English
words & meanings
Kelvin -the
SI unit of temperature.
ஒரு சர்வதேச வெப்ப அலகு.
இந்த கெல்வின் அளவீடு தனிமுழு அளவீட்டு முறை என்றும் அழைக்கப்படும்.
Kindle - set
something on fire.
தூண்டுதல்
ஆரோக்ய வாழ்வு
கட்டிகள் உடைய பப்பாளிப் பாலை பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூச வேண்டும் அல்லது பப்பாளி இலையை நசுக்கி வேகவைத்து கட்டியின் மீது வைத்து கட்ட வேண்டும்.
Some
important abbreviations for students
* alt-alteration
* Annot-Annotation
நீதிக்கதை
பட்டாணிக்குத் தையல்
ஒரு
நாள் ஒரு பாட்டி மண் அடுப்பில் சட்டியை வைத்து சமையல் செய்வதற்கு அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்தாள். அது கொதித்ததும் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்த சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, என்னை சமைக்கவேண்டாம் என்று கத்தியது.
பாட்டி நீ மரியாதையாக சட்டிக்குள் போ இல்லையென்றால் உன்னை நசுக்கி விடுவேன் என்றாள். பட்டாணி பாட்டி சொல்வதைக் கேட்காமல் அங்கிருந்து வேகமாக ஓடியது. அப்போது நில் நில் ஓடாதே உன்னுடன் நானும் வருகிறேன் என்றது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி. அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது, அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன் என்றது, நிலக்கரி.
என்ன
வெளியுலகிற்கா? அப்படியென்றால் நானும் வருகிறேன் என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று. சரி, என்றபடி மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
இனி
நாம் தொடர்ந்து செல்ல முடியாது என்று நிலக்கரியும், பட்டாணியும் திரும்பி போக நினைத்தது. நண்பர்களே நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி செல்லுங்கள் என்று நம்பிக்கை காட்டியது, வைக்கோல்.
முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீர்ருக்குள் விழுந்தன.
பட்டாணி சிரித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன. அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டது.
தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்ததால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்க வேண்டியிருக்கிறது.
No comments
Post a Comment