School Morning Prayer Activities- 17-10-2019
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச் சுருக்கம்.
🔮தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் தான் டெங்கு காய்ச்சல் அதிகம்:
சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
🔮நாசா தனது நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான
இரண்டு நவீன விண்வெளி உடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
🔮முடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர்” -ஐசிசியின் விதி மாற்றத்திற்கு தெண்டுல்கர் வரவேற்பு.
🔮வட கிழக்கு பருவமழை தொடக்கம் : முன்னெச்சரிக்கை பணிகளுக்கு
42 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் : காஞ்சி-க்கு மட்டும் 11 அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு.
🔮தமிழகம்கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 750 தொல் பொருட்கள் மதுரையில்
கண்காட்சிக்காக தற்காலிகமாக வைக்கப்படும்: மாஃபா பாண்டியராஜன்.
🔮விளையாட்டுதெற்காசிய யு-15 மகளிர் கால்பந்து: இந்தியா சாம்பியன்.
இன்றைய திருக்குறள்
குறள் எண்- 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
மு.வ உரை:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
கருணாநிதி உரை:
சாவு
எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.
சாலமன் பாப்பையா உரை:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
சிந்தனையே வளர்ச்சியின் அறிகுறி. சிந்திக்காதிருப்பதோ அழிவின் அறிகுறி. நற்சிந்தனை மட்டுமே ஆக்கபூர்வமான செயலுக்கு வழிகோலும்.
- அப்துல் கலாம்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ
விளக்கம் :
ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்து வைத்துக் கொண்டு தேநீர் காப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால் ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்ததே இந்த பழமொழியாகும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Teacher - ஆசிரியர்
Advocate - வழக்கறிஞர்
Blacksmith -
கொல்லர்
Begger - பிச்சைக்காரர்
✍✍✍✍✍✍✍
பொது
அறிவு
1.ரூபாய் நோட்டுகள் எதனால் உருவாக்கப்படுகிறது?
பருத்தி இழையினால்
2. உலகிலேயே சிறிய முட்டையிடும் பறவை எது?
ரீங்காரப் பறவை
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1. ஒற்றைக் காதுக்காரன், ஓடி ஓடி வேலி அடைக்கிறான். அது என்ன?
ஊசி
2. புறப்பட்டது தெரிகிறது; போன சுவடு தெரியவில்லை. அது என்ன?
புயல்
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் ! விவசாயம்!
சுரைக்காய்
🍐 சுரைக்காய் உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல கொடிவகை தாவரமாகும்.
🍐 சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று கூறப்படுகிறது.
🍐 உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் ஒன்று.
🍐 தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்க்கலன்களாகப் பயன்பட்டன.
🍐 தற்காலத்தில் இது உலகெங்கும் உணவாகப் பயன்படுகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை
தூக்கணாங்குருவி
ஒரு
மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது. அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது. குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,
குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே? என்றது. ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது.
வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங்குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி, எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.
பாவம் தூக்கணாங்குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது. தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
No comments
Post a Comment