School Morning Prayer Activities- 16-10-2019
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮தமிழகத்தில் கோவை - பொள்ளாச்சி, கோவை - பழனி, கரூர் - சேலம் ஆகிய பகுதிகளில் ரெயில் சேவை தொடக்கம்.
🔮2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
🔮இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு .
🔮2020-ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் ஆன்லைனில்
மட்டுமே பதிவு செய்ய முடியும்: இந்திய ஹஜ் குழு.
🔮5-வது கட்ட அகழாய்வு பணி நிறைவு: கீழடியில் இருந்து தொல்லியல்துறையினர் காலி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
🔮நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 'சேவா ரயில்'திட்டம்: தமிழகத்தில் 3 புதிய ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பியூஸ் கோயல்
இன்றையதிருக்குறள்
குறள்எண்- 229 .
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
மு.வ உரை:
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.
கருணாநிதி உரை:
பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
சாலமன் பாப்பையா உரை:
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
குழந்தை பருவத்தில் கற்பிக்கப்படும் தரமான நற்கல்வி பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட கல்வியைவிட வாழ்க்கைக்கும் சமுதாயத்திற்கும் மிக முக்கியமானது.
- அப்துல் கலாம்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
அழுத
பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்.
விளக்கம் :
சில
குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கின்றன. உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது என்பதனை இப்பழமொழி குறிக்கிறது.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Plate -தட்டு
Mirror - முகக் கண்ணாடி
Match Stick - தீக்குச்சி
Match Box - தீப்பெட்டி
Tooth Pick - பல் குச்சி
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. பாரம்பரிய பண்புகளுக்கு காரணமாக இருப்பவை எவை?
ஜீன்கள்
2.உலகிலேயே இந்தியாவில் அதிகமாக கிடைக்கும் தாது எது?
மைக்கா
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விடமாட்டேன். அவன் யார்?
விறகு
2. பார்க்கத்தான் கறுப்பு: உள்ளமோ சிவப்பு :
நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு. அது என்ன ?
தேயிலை
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
கோவக்காய்
🍐 கோவைக்காய் கொடிவகை தாவரங்களில் ஒன்று. இதனை தொண்டைக்கொடி
என அழைக்கின்றனர்.
🍐 வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும்.
🍐 இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது.
🍐 இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன்
கொண்டவை.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை
தாயின் அன்பு
கடைக்கு சென்ற அம்மா நான்கு பிஸ்கட்டுகள் வாங்கி வந்தாள். அதில் இரண்டு பிஸ்கட்டை குழந்தையிடமும், ஒரு பிஸ்கட்டை கணவரிடமும் சாப்பிட கொடுத்தாள். மீதமிருந்த ஒரு பிஸ்கட்டை பாதியாக உடைத்து சாப்பிட ஆரம்பித்தாள். வெளியே பிஸ்கட்டுடன் சென்ற குழந்தை ஒரு பிஸ்கட்டை சாப்பிட்டு முடித்து விட்டு, அடுத்த பிஸ்கட்டை சாப்பிட ஆரம்பிக்கும் போது அது கீழே விழுந்தது. உடனே அந்த குழந்தை அம்மாவிடம் போய் என் பிஸ்கட்டு கீழே விழுந்திருச்சு எனக்கு வேற பிஸ்கட்டு வேணும் என அழ ஆரம்பித்தது.
அப்போது தான் அம்மா தன்னிடமிருந்த கடைசி பிஸ்கட்டை வாயில் போட்டு மெள்ள ஆரம்பித்திருந்தாள். குழந்தை பிஸ்கட்டு கேட்டு தொடர்ந்து அடம் பிடித்து அழ ஆரம்பித்தது. அம்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
உடனே
தன் குழந்தையை பக்கத்தில் அழைத்து வாயோடு வாய் வைத்து ஒரு தாய்க்குருவி தன் குஞ்சுகளுக்கு உணவை ஊட்டுவது போல தன் வாயிலிருந்த பிஸ்கட்டை குழந்தையின் வாய்க்கு ஊட்டினாள். குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு சாப்பிட ஆரம்பித்தது. இதைப் பார்த்த கணவரின் உடம்பெல்லாம் சிலிர்த்து போனது. அம்மாவின் கருணை உள்ளம் யாருக்கு வரும். அம்மா, அம்மா தான் அம்மாவுக்கு ஈடு இணை உலகில் யாருமே இல்லை.
🌿🌿🌿🌿🌿🌿🌿
HEADLINES
🔮IMF revises India's growth projection
to 6.1 per cent in 2019.
🔮Affected by anti-China protests,
IndiGo to suspend Kolkata-Hong Kong flights from November 6.
🔮Aavin urges tanker lorry owners to
call off strike.
🔮Heavy rain likely for three more days
in Coastal Andhra Pradesh.
🔮Next war will be won through indigenised
weapons systems: Army Chief Bipin Rawat.
No comments
Post a Comment