School morning Prayer Activities - 03-10-2019
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
திருவள்ளூர் மாவட்டம்,
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
செய்திச் சுருக்கம்
காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சவுதி அரேபியா ஒப்புதல்
அளிக்கிறது.
🔮செய்திமாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்புக்கான
முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு.
🔮தமிழகம்சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தடுப்புப் பணி -
ரூ.244 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
🔮தமிழகம்சேலம் மாவட்டத்தில் 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு:
ஆட்சியர் தகவல்.
🔮மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் பிரதமர் மோடி, சோனியா காந்தி
உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை.
🔮உலக தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் ரஷிய வீராங்கனை
மரியா ‘ஹாட்ரிக்’ சாம்பியன்.
இன்றைய திருக்குறள்
குறள் எண்- 221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
மு.வ உரை:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
கருணாநிதி உரை:
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈ.கைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
அறிவியலும் ஆன்மீகமும் மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டிய புனிதத் தன்மையான காரியங்களைச் செய்ய வேண்டும்.
- அப்துல் கலாம்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
கழுதை கெட்டால் குட்டிச் சுவர்
விளக்கம் :
கழுதையின் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது புண் போன்று ஏதாவது வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை விட பாதி சேதமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை அதன்மேல் தேய்த்துக் கொள்ளும். காரணம் நல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது. எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சேதமடைந்த சுவர்களையே நாடும். இங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம். இதுவே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Tooth Powder
பல் பொடி
Thread நூல்
Tap குழாய்
Door-mat
கால்மிதி
Spittoon
துப்புத் தொட்டி
✍✍✍✍✍✍✍✍
பொது
அறிவு
1. மிகப் பெரிய இந்திய மாநிலம்?
மத்திய பிரதேசம்
2. 3900 தீவுகளைக் கொண்ட நாடு எது?
ஜப்பான்
📫📫📫📫📫📫📫📫
விடுகதை
1.அம்மா போடும் வட்டம், பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம், சுட்டுத்
தின்ன
இஷ்டம் அது என்ன?
அப்பளம்
2. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர்? அது என்ன?
கண்ணீர்
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றைய கதை
என்
அடிமைகளுக்கு நீ அடிமை
மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.
அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும்படி ஆணையிட்டான்.
முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப்படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.
முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து கொல்ல வரும் நபரைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா? என்று கேட்டான்.
அதற்கு முனிவர் மன்னா... நீ இரண்டு விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் உன்னால் என் உடம்பை வேண்டுமானால் வெட்டிப் போட முடியுமே தவிர, என்னை அழிக்க உன்னால் இயலாது. இரண்டாவது, என்னுடைய இரண்டு அடிமைகளுக்கு நீ அடிமையாக இருக்கிறாய் என்று பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது! என்றார்.
அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. நான் உலகத்திற்கே அரசன். மாவீரன். நான் எப்படி அடிமையாக முடியும்? என்று முனிவரிடம் கேட்டான். அவர் அப்பா! கோபமும் ஆசையும் எனக்கு அடிமைகள். நீ அவை இரண்டிற்கும் அடிமையாகக் கிடக்கிறாய். அதைத்தான் நான் சொன்னேன் என்றார். மன்னருக்கு இப்போது விளங்கி விட்டது! முனிவரை வணங்கி விட்டுத் தன் வழியே போய் விட்டான்.
No comments
Post a Comment