அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிப்பு: தமிழக அரசு
தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸ் வழங்கப்படும்.
இதன்
மூலம் தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3.48 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர். லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதமும் வழங்கப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3.48 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.472.65 கோடி போனஸ் வழங்கப்படும்.
வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வாரிய சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments
Post a Comment