Header Ads

Header ADS

5 தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை ( 30.10.2019 ) விடுமுறை


6.11.2019 - புதன் கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருபுவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாவிற்கு நாளை(30-10-2019) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜை கொண்டாடப்படுகிறது.

30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெறுவதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் .பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இதேபோல தி.மு.. சார்பில் அதன் தலைவர் மு..ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.