Header Ads

Header ADS

ரூ.4.5 லட்சம் வரை கடன்: SBI அறிமுகப்படுத்தும் EMI டெபிட் கார்டு!



எஸ்.பி. வாடிக்கையாளர்கள் எளிதாக .எம். முறையில் பொருட்களைப் பெற புதிய டெபிட் கார்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.
 
பாரத ஸ்டேட் வங்கியில் புதிதாக .எம். டெபிட் கார்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட நகரங்களில் 40,000 க்கும் மேற்பட்ட கடைகளில் 4.5 லட்சம் ரூபாய் வரையில் நீங்கள் .எம். மூலமாக பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். பரிவர்த்தனை முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு தவணைகள் தொடங்கும். வங்கிக்கணக்கில் முறையான நிதி இருப்பு மற்றும் பணப்பரிவர்த்தனை வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
எஸ்.பி.ஐயின் இந்த வசதியைப் பெற ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.

நீங்கள் வங்கிக்கிளையை அணுக வேண்டிய தேவையில்லை. மேலும், பூஜ்ஜிய செலவில் .எம்.ஐயில் இந்த டெபிட் கார்டு மூலமாக பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
 
தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வரும் எஸ்.பி., இந்த .எம். டெபிட் கார்டு மூலமாக வாடிக்கையாளர்கள் பலர் பயன்பெறுவர் என்று தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் எளிதாக இந்த வசதியை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.