School morning Prayer Activities - 23-09-2019
T.தென்னரசு,இரா.கி.பேட்டை, திருவள்ளூர் மாவட்டம்.TN டிஜிட்டல் டீம்
செய்திச் சுருக்கம்*
🔮தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
🔮மனிதர்களுடன் செல்லும் இந்தியாவின் முதல் விண்வெளி விமானம் 2021ம்
ஆண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
🔮பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட்
சமூகத்தினர் உற்சாக வரவேற்பு.
🔮 தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை
பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🔮இந்திய வீரர் தீபக் பூனியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் - ஒலிம்பிக்
போட்டிக்கும் தகுதி பெற்றார்.
🔮விளையாட்டுஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆண்கள் 61 கிலோ பிரிவில்
வெண்கலம் வென்றார் இந்தியாவின் ராகுல் அவேர்.
இன்றைய திருக்குறள்*
*குறள் எண்- 330*
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப
செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை
யவர்.
மு.வ உரை:
நோய்
மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
கருணாநிதி உரை:
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நோய்
நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
மக்களைச் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றும் தலைவன் தான் ஒரு நாட்டின் பாதையை மாற்றியமைக்கும் திறன் பெற்றவனாவான்.
-அப்துல் கலாம்
♻♻♻♻♻♻♻♻
*Important Words*
Feast விருந்து
Food உணவு
Butter வெண்ணெய்
Pea பட்டாணி
Whey மோர்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*பழமொழி மற்றும் விளக்கம்*
*பிள்ளையார பிடிக்கப்போயி குரங்க பிடித்த கதையாயிடுச்சி*
விளக்கம் :
களிமண்ணில் பிள்ளையார் சிலை செய்ய எண்ணி நம் கைகளால் பிடித்து சிலையை செய்து பார்த்தால் அது குரங்கு போல் இருக்கிறது. நாம் செய்ய நினைத்ததோ பிள்ளையார் சிலை. ஆனால் இறுதியில் கிடைத்ததோ குரங்கு சிலை. இதைப்போலதான் வாழ்க்கையிலும் நல்லது செய்ய எண்ணி ஒரு செயலை செய்தால் கடைசியில் அது தீயதாக வந்து முடிகிறது.
✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1) வான்வெளியில் புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும் வாயு எது?
*ஓசோன்*
2) குதிரை திறன் என்பது எத்தனை வாட்?
*746 வாட்*
📫📫📫📫📫📫📫📫
*விடுகதை*
1. உணவை எடுப்பான். ஆனால் உண்ண மாட்டான்?
*அகப்பை*
2. காலில் தண்ணீர் குடிப்பான். தலையில் முட்டை இடுவான். அது என்ன?
*தென்னை மரம்*
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*வேலை ஒன்று சம்பளம் இரண்டு*
சத்ரபதி சிவாஜியின் அரண்மனையில் வேலை செய்தவர்களில் ஒரு பணியாளருக்கு 100 ரூபாயும் இன்னொருவருக்கு 150 ரூபாயும் சம்பளம். ஆனால் இருவருக்கும் ஒரே வேலைதான். குறைந்த சம்பளம் வாங்கியவர் இது பற்றி சிவாஜியிடமே கேட்டுவிட்டான். அப்போது வாசலில் ஏதோ சப்தம் கேட்டது. சிவாஜி அந்த பணியாளனிடம் வாசலில் சத்தம் கேட்கிறது போய் பார்த்து வா என்றான். அவன் போன வேகத்தில் திரும்பி வந்தான். ராஜா ஒரு யானை போய்க்கொண்டிருக்கிறது என்றான். அது என்ன யானை? என்றார் சிவாஜி. இவன் திரும்பவும் போய் வந்து ஆண் யானை மகாராஜா என்றான். அதன் விலை என்ன? என்றதும் திரும்ப யானைக்காரனை பார்க்க ஓடினான் பணியாளன். இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் ஓடி ஓடி சென்று பார்த்துவர வேண்டியதாயிற்று.
சிவாஜி அடுத்த பணியாளனை அழைத்தார். வாசலில் சத்தம் கேட்கிறது. பார்த்து வா என்றார். அவன் சற்று நேரத்தில் திரும்பி வந்தான். மகாராஜா அங்கே ஒரு ஆண் யானை போகிறது. மிகுந்த லட்சனமானது. தந்தத்தின் நீளம் மட்டும் ஐந்தடி இருக்கும். விலை ஆயிரம் பொன் பெறும் என்று விவரமாக எடுத்துரைத்தான். சிவாஜி முதல் பணியாளனை ஒரு பார்வை பார்த்தார். அதன் பிறகு அவனிடம் கூலி பற்றி வாய் திறக்கவே இல்லை.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
T.தென்னரசு,
இரா.கி.பேட்டை,
திருவள்ளூர் மாவட்டம்.
TN டிஜிட்டல் டீம்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*
No comments
Post a Comment