School Morning Prayer Activities -16-09-2019
Covai women ICT_போதிமரம்
இன்றைய செய்திகள்
16.09.2019
* தமிழகத்தில் ஆவின் பால் விலையை தொடர்ந்து, ஆவின் பால் பொருள்களின் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது.
* தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகமான கறுப்பு கவுனி அரிசியில் இருந்து
நூடுல்ஸ், பாஸ்தா, குக்கீஸ் உட்பட மதிப்பு கூட்டப்பட்ட ஐந்து வகையான
உணவு பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் கறுப்பு
கவுனி அரிசியிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஐந்து வகையான உணவு
பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
* தூய்மை இந்தியா திட்டப்பணியில், வேலூர் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது,'' என, மத்திய இணை செயலாளர் ஜிந்தால் கூறியுள்ளார்.
* உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 22வது முறையாக பட்டம்
வென்று இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை புரிந்துள்ளார்.
* 19 வயதுக்குட்பட்டோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.
* வியட்நாம் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர்
அதிகாரம்:கூடாவொழுக்கம்
திருக்குறள்:280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
விளக்கம்:
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.
பழமொழி
Many a slip
between the cup and the lip.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
இரண்டொழுக்க பண்புகள்
1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.
2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்
பொன்மொழி
எறும்பு ஓரறிவு உயிர் ,அவை ஆற்றிவு உடைய நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் ஒற்றுமை, சேமிப்பு, உழைப்பு மற்றும் சுறுசுறுப்பு..
----- தென்.கோ .சுவாமிநாதன்
பொது
அறிவு
1. இரத்தத்தில் உள்ள Ph அளவு என்ன?
7.35 - 7.45
2. Ph என்றால் என்ன?
ஒரு
திரவத்தில் உள்ள அமில அல்லது கார அளவை குறிப்பிடும் ஒரு குறியீடு.
English
words & meanings
* Plasma- The clear, fluid portion of blood in which cells are
suspended.
பிளாஸ்மா. இரத்தத்தில் காணப்படும் நிறமற்ற திரவம் .
* Pile - A
heap of things.
பொருட்களின் குவியல்
ஆரோக்ய வாழ்வு
காரமும் கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. இது எளிதில் ஜீரணமாகி மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும் .
Some
important abbreviations for students
* IQ =
Iraq
* IR = Iran
நீதிக்கதை
சிட்டுக்குருவியின் ஆசை
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி.
தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
நீதி
:
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.
சவுரப் வர்மா சீன வீரர் சன் ஃபெய் ஜியாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
Today's
Headlines
🌸 After the hike in the price of Aavin
milk in Tamil Nadu, the price of Aavin
milk products also increased.
🌸 Five varieties of value added food items including noodles, pasta and
cookies are to be introduced from the black rice variety, the traditional rice
variety of Tamilians.
Five Value Added Food Products from Black Rice are to be introduced at Indian Food
Processing Institute, Thanjavur.
🌸 The Vellore Corporation is number one in the Swachh Bharat India
project, ”said Jindal, Union Joint Secretary.
🌸 Pankaj Advani holds the record for the 22th time at the World Billiards
Championships.
🌸In under 19 Asian Cup cricket competition India won the championship by
beating Bangladesh in 5 runs
🌸 Indian Opener Sourabh Verma defeated Chinese player Sun Fei Jiang at the
Vietnam Open Badminton Championships.
No comments
Post a Comment