டெஸ்டிங்கில் மாருதியின் எலெக்ட்ரிக் வேகன்-ஆர்... என்ன ஸ்பெஷல்? #MotorVikatanExclusive
தற்போதைய சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்தியாவில் விற்பனையாகும் இரண்டு கார்களில் ஒன்று தனது தயாரிப்பு என்கிற அளவில் கோலோச்சும் மாருதி சும்மா இருக்குமா?
''ஏப்ரல் 2020 முதலாக டீசல் வாகனங்களின் உற்பத்தி கிடையாது... 35,000 ரூபாய் முதல் 1.13 லட்ச ரூபாய் வரை கார்களின் விலையில் தள்ளுபடி... Service on Wheels எனும் புதிய மொபைல் ஸ்மார்ட் வொர்க்ஷாப் மற்றும் மொபைல் நெக்ஸா ஷோரூம்... Fuel Hose-ல் ஏற்பட்ட பிரச்னைக்காக ரீ-கால் செய்யப்பட்ட 40,000-க்கும் அதிகமான வேகன்-ஆர் கார்கள்... 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட மாடல்களுக்கு 5 வருடம்/1 லட்சம் கி.மீ வாரன்ட்டி... முறையே 1 லட்சம் - 4.5 லட்சம் - 6 லட்சம் - 19 லட்சம் விற்பனை எண்ணிக்கையைக் கடந்த இக்னிஸ் - விட்டாரா பிரெஸ்ஸா - பெலினோ - டிசையர்... 250-க்கும் அதிகமான True Value ஷோரும்கள், 350-க்கும் அதிகமான நெக்ஸா ஷோரூம்கள், 400-க்கும் அதிகமான Arena ஷோரூம்கள்... BS-6 & CNG பெட்ரோல் கார்களின் அறிமுகம்... சூரிய சக்தியில் இயங்கும் கூர்கான் தொழிற்சாலை... க்ராஷ் டெஸ்ட்டில் 3 ஸ்டார்களைப் பெற்ற இக்னிஸ்... விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ்-க்ராஸ் பெட்ரோல் மாடல்களின் இறுதிக்கட்ட பணிகள்...
டொயோட்டா உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்... நிறுத்தப்பட்ட ஜிப்ஸியின் உற்பத்தி மற்றும் மோட்டார் ஸ்போர்ட் நிகழ்வுகள்... பாதுகாப்பு விதிகளுக்கேற்ப அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள்... 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களின் அறிமுகம்... தொழிற்சாலையில் குறைக்கப்பட்ட உற்பத்தி மற்றும் தற்காலிக வேலைநிறுத்தம்''... அப்பப்பா! மாருதி சுஸூகி பற்றிச் சொல்வதற்கு இந்த வருடம் நிறையவே செய்திருக்கிறது; தற்போதைய சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்தியாவில் விற்பனையாகும் இரு கார்களில் ஒன்று தனது தயாரிப்பு என்றளவில் கோலோச்சும் இந்த நிறுவனம் சும்மா இருக்குமா என்ன? செங்கல்பட்டு அருகே டெஸ்ட்டிங்கில் எலெக்ட்ரிக் வேகன்-ஆர் இருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான எம்.அர்ஜுன். ஏற்கெனவே விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மாடலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற MOVE Summit-ல் காட்சிப்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் வேகன்-ஆர், ஜப்பானில் விற்பனை செய்யப்படும் மாடலைப் போலவே இருந்தது; இது எலெக்ட்ரிக் வாகனமாக இருப்பினும், பெரிய மற்றும் அகலமான 2 Part வடிவ கிரில் இருக்கிறது. மேலும், ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ், பாடியில் அங்கமாக இருக்கும் B-பில்லர், கதவுகளில் வைக்கப்பட்டிருக்கும் ரியர் வியூ மிரர்கள், பம்பரில் வைக்கப்பட்டிருக்கும் Sunken டெயில் லைட், திறக்கும் வசதியற்ற டெயில் கேட் என இதில் ஸ்டைலான அம்சங்கள் நிறைய! அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் (ஏப்ரல் 2020) அறிமுகமாக இருக்கும் எலெக்ட்ரிக் வேகன்-ஆர், தற்போது விற்பனை செய்யப்படும் வழக்கமான மாடலைவிடக் கிட்டத்தட்ட இருமடங்கு விலையில் வரும் (சுமார் 7-7.5 லட்சம்) என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நம் நாட்டில் காரைத் தொடர்ச்சியாக டெஸ்ட் செய்து, ரேஞ்ச் - சார்ஜ் ஏற்றும் நேரம் - உள்நாட்டு உதிரிபாகங்களின் பயன்பாடு - விலை - வாடிக்கையாளர்களின் வரவேற்பு - தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை ஆகியவற்றை இறுதி செய்யும் பணிகளில் மாருதி சுஸூகி தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதற்காகவே 50-க்கும் மேற்பட்ட கார்கள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தாய் நிறுவனமான ஜப்பானின் சுஸூகி மோட்டார் கார்பரேஷன் உருவாக்கியிருந்தாலும், மாருதி சுஸூகியின் கூர்கான் தொழிற்சாலையில்தான் உற்பத்தி நடைபெற்றுள்ளது.
Heartect பிளாட்ஃபார்மில் எலெக்ட்ரிக் கார்களையும் தயாரிக்க முடியும் என்பது ப்ளஸ். எனவே கேபின் இடவசதியில் பெரிய மாற்றமிருக்காது. இங்கே ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம் இடம்பெறலாம்
மேலும் வழக்கமான AC தவிர DC Fast Charging வசதி இருப்பதால், ஒரு மணிநேரத்திலேயே 80% பேட்டரி பவரை ஏற்றிவிட முடியும்; இதில் AC சார்ஜிங் பாயின்ட்டைப் பயன்படுத்தும்போது, பேட்டரிகளை முழுமையாகச் சார்ஜ் ஏற்ற 7 மணிநேரம் தேவைப்படும். எலெக்ட்ரிக் வேகன்-ஆரின் முன்பக்கத்தில் AC சார்ஜிங் பாயின்ட் இருந்தால், பின்பக்கத்தில் DC சார்ஜிங் பாயின்ட் இருக்கிறது. முதற்கட்டமாக சிங்கிள் சார்ஜில் 200 கி.மீ ரேஞ்ச் இருக்கும் எனத் தகவல்கள் வந்தநிலையில், அது 130 கி.மீ-க்கும் அதிகம் என்றளவில் சுருங்கியிருக்கிறது (நகரப் பயன்பாட்டின்போது). தவிர விரட்டி ஓட்டப்படும்போது, எலெக்ட்ரிக் வேகன்-ஆரின் ரேஞ்ச் 100 கி.மீ-யாகிவிடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.
எலெக்ட்ரிக் கார்களில் வேகம் செல்லச் செல்ல ரேஞ்ச் அதிரடியாகக் குறையும் என்ற காரணத்தினால், அதைச் சமவிகிதத்தில் மாருதி சுஸூகி கொண்டு செல்லும் எனத் தெரிகிறது. ஏனெனில் எலெக்ட்ரிக் டிகோர் மற்றும் e-வெரிட்டோ ஆகியவற்றைப் போலவே, இந்த காரும் குறைவான ரேஞ்ச்சுக்குப் பெயர் பெறாது என நம்பலாம்.மா
முன்னே சொன்ன அந்த கார்கள் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில், எலெக்ட்ரிக் வேகன்-ஆர் அந்த தடைக்கல்லை உடைக்கலாம் எனத் தோன்றுகிறது. FAME-2 விதிகளின்படி இருப்பதால், மானியம் மற்றும் அரசு சலுகைகள் இந்தக் காருக்குக் கிடைக்கும்.
No comments
Post a Comment