Header Ads

Header ADS

கூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க! கூகுலின் புதிய அப்டேட் !

Image result for GOOGLE


கூகுள் க்ரோமில் உள்ள டேப்களை பயனாளர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு வேலைப் பார்க்கும் புதிய முறையை கண்டுப்பிடித்து அசத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் க்ரோமை கூகுல் நிறுவனம் புதுப்பித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஆண்ட்ராய்டு, விண்டோஸ், லினக்ஸ் உள்ளிட்ட இயங்குதளங்களுக்கான கூகுள் க்ரோம் 77 புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது கூகுள்.
 
எளிமையான முறையில் கூகுள் டேப்ஸை நாம் அமைத்துக் கொள்ள இந்த அப்டேட் உதவும். கூகுள் டேப்ஸ்களை நமக்கு ஏற்றார் போல் கிளிக் மற்றும் டிராக் செய்து நாம் தள்ளி வைத்துக் கொள்ளலாம். நமக்கு எந்த வரிசையில் வைக்க வேண்டுமோ அப்படி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
நாம் எப்போதும் ஒரு விஷயத்தை பற்றி தெரிந்துக் கொள்ள பல டேப்களை திறந்து வைத்து தேடுவோம். கூகுள் க்ரோமில் அதிக டேப்களை ஓபன் செய்வதால் ஒரு சிலவற்றை பார்க்க இயலாமல் போகக் கூடிய சூழல் நிலவும். அப்போதும், நாம் நம் கர்ஸ்ரை அந்த டேப் மீது வைத்து தள்ளினால் போதும் மறைந்து போன ஒரு சில டேப்களும் வெளி வரும்.
 Image result for GOOGLE CHROME
இப்போதைக்கு நாம் திறந்துள்ள பக்கத்தின் தலைப்பு மட்டுமே தென்படும். கொஞ்ச நாட்கள் சென்றபின் அந்த பக்கத்தின் சிறிய படமும் தெரியும் என்று கூறுகின்றனர் கூகுள் நிறுவனத்தினர். இதுமட்டுமின்றி நமக்கு பிடித்தாற்போல் நமது பக்கத்தை மாற்றலாம். பச்சை, மஞ்சள், நீலம் என எந்த நிறத்தில் நமது பக்கம் இருக்க வேண்டுமோ அது போன்று நாம் மாற்றி வேலை பார்க்கலாம். கூகுள் க்ரோம் பயனாளிகளுக்கு அந்நிறுவனம் வழங்கும் மிகப் பெரிய சர்ப்ரைஸாக இது இருக்கிறது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.