மாணவர்களுக்கு ஐ.சி.டி என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
அரசு
பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், இளைஞர்கள் விருப்பப்பட்டால் தமிழ் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு அந்தந்த பள்ளியில் 2 மணி நேரம் தமிழ்நாட்டின் கலாச்சார பண்பாடுகளை தெரிந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக, முதல்வரிடம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அந்தந்த பள்ளிகளில் விடுமுறை நாட்களில் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களை கொண்டு 2 மணி நேரம் வகுப்பு எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தமிழ் வர்ச்சித்துறை அமைச்சரோடு சேர்ந்து அந்த பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய அவர், தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், பள்ளிகளில் உள்ள விளையாட்டு திடல்களை தூய்மைபடுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இது தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் துணையோடு விளையாட்டுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறினார். பணிகள் நிறைவடைந்ததும் இந்த விளையாட்டு திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். மேலும் 9, 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் இறுதிக்குள் ஐ.சி.டி ( Information Communication
Technology) என்ற
புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார். இதற்காக, மேல்நிலைப்பள்ளியில் 20 கணினி, உயர்நிலை பள்ளியில் 10 கணினி கொண்டுவரப்படவுள்ளது. அதேபோல் 6-லிருந்து 8ம் வகுப்பு மாணவர்களுக்காக அடுத்த மாதம் இறுதிக்குள் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக்கல்வித்துறையின் பணியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆள்மாறாட்டம் குறித்து நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விக்கு சுகாதாரத்துறைதான் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment