Header Ads

Header ADS

தமிழகம் பின்லாந்தின் கட்டணமில்லா கல்விமுறை தரத்தயாரா? : பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்


Image result for பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்

பின்லாந்து நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் கல்வி முறை அங்கு சாத்தியம் என்றால் அந்த முறை இந்தியாவிலும் சாத்தியம் தான், ஆனால் அதற்காக அந்த நாட்டவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது தான் முக்கியம். பல  வருடங்களுக்கு முன்பே  எண்ணும், எழுத்தும் இரண்டும் கற்றல் திறனில் போர்ச்சுக்கலுக்கு அடுத்த படியாக தான் பின்லாந்து இருந்தது. ஐரோப்பியாவில் மிகவும் பின்தங்கிய நாடாக பின்லாந்து இருந்தது. பின்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் யோசித்தார்கள் ஏன் நம்முடைய நாட்டில் கல்வி பின்தங்கி இருக்கிறது என்று.  பின்தங்கலில் இருந்து மீளுவதற்கு அனைத்து பள்ளிகளும்  அரசு செலவில் நடக்கும் பள்ளியாக மாற்ற வேண்டும். பின்லாந்தில் கல்வியை முழுவதும் அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. கட்டணமில்லா கல்வி முறை அமலானது; தனியார் பள்ளிக்கூடமாக இருந்தாலும் கட்டணம் வசூலிக்க முடியாது.  தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் கட்டணமில்லா கல்வியை தர அரசு தயாரா?பின்லாந்தில் 7 வயதில் தான் முறைப்படியான கல்வி தொடங்குகிறது. 9 வருடம் முறைப்படியான கல்வி; அதற்கு பெயர் தான் முழுமையான கல்வி என்று கூறுகின்றனர். முழுமையான கல்வி 9 வருடம் முடித்த பிறகு தான் செகண்டரி  எஜிகேஷனில் தான் மேற்ப்படி அகடமி சைடா அல்லது ஒகேஷனல் சைடா (தொழிற்கல்வி) என்பதை 16 வயதில் முடிவு செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் அப்படி தான், இந்தியாவில் 16 வயதில் தான் பிளஸ் 1 வகுப்பு ஆரம்பிக்கிறது. ஏற்கனவே உயர்கல்வியில் ஒகேஷனல் கல்வி இருக்க தான் செய்கிறது. தமிழ்நாட்டில் ஒகேஷனல் படிப்பு அறிமுகப்படுத்தப்படும் அதே வயதில் தான்  பின்லாந்திலும் அறிமுகப்படுத்துகின்றனர். பின்லாந்து கல்வி முறை இங்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்தால் அங்கு சமமான கற்றல் வாய்ப்பை பின்லாந்து அரசு எல்லா குழந்தைகளுக்கும் கொடுக்கிறதே, அதை அரசு தருமா?ஆனால், தமிழகத்தில் சமமான கற்றல் வாய்ப்பு இல்லை. இங்கு தனியார் பள்ளிகள் இருக்கிறது. அரசு பள்ளிகள் இருக்கிறது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாதிரியாக கல்வி முறை அமலில் இருக்கிறது.  பின்லாந்து மாதிரி உருவாக்க வேண்டும்  என்று நினைத்தால் அரசு முழு செலவில் தாய்மொழி வழியில் அனைவருக்கும் கல்வி கொடுக்க முன்வர வேண்டும். உலகத்தில் உள்ள வளர்ந்த நாடுகள் அனைத்துமே அதன் வளர்ச்சிக்கு காரணம் தாய்மொழி வழிக்கல்வி தான்.

 மயில்சாமி அண்ணாத்துரை, சிவன் இருவரும் விஞ்ஞானிகள் ஆனது தாய்மொழி வழியில் கல்வி கற்றது தான். அவர்கள் அரசு பள்ளியில் தாய்மொழி வழியில் தான் படித்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் அப்துல்கலாம் அப்படி  தான் படித்து சமூகத்திற்கு பயன்பட்டுள்ளனர். 1980ம் ஆண்டிற்கு பிறகு தான் ஆங்கிலம் வந்தது. 1920ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் தாய்மொழி வழியில் கல்வியை கொடுத்தது. அரசு பள்ளி மூலம் தாய்மொழி வழியில் அனைவருக்கும் கல்வி கொடுக்குமானால் சிந்திக்கும் திறன் கொண்ட  மக்களை உருவாக்கலாம்.பல தரத்தில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகளை வைத்துக் கொண்டு கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்திக் கொண்டு அரசு பள்ளிகளை வலுப்படுத்த முடியாது. ஒரு பக்கத்தில் அரசு பள்ளி மற்றொரு பக்கத்தில் பலவிதமான  தனியார் பள்ளி என்ற முறையை வைத்துக் கொண்டு பின்லாந்து கல்வி முறையல்ல. எந்த நாட்டு கல்வி முறையை இருப்பது பின்பற்றினாலும் கல்வியில் நம்மால் அனைவருக்கும் சமமான சிறந்த கல்வியை அளிக்க முடியாது.பின்லாந்தில் கல்வியை முழுவதும் அரசு  பொறுப்பேற்றுக் கொண்டது. கட்டணமில்லா கல்வி முறை அமலானது; தனியார்  பள்ளிக்கூடமாக இருந்தாலும் கட்டணம் வசூலிக்க முடியாது. தமிழ்நாட்டில்  அனைத்து பள்ளிகளிலும் கட்டணமில்லா  கல்வியை தர அரசு தயாரா?

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.