Header Ads

Header ADS

வரும் பொங்கலுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை...



தமிழக சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறையை அறிவித்து இன்ப அதிர்ச்சியை எடப்பாடி பழனிசாமி கொடுக்கத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தமிழக சரித்திரத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்கள் விடுமுறையை அறிவித்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி.
 
பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15 மற்றும் 16, 17 தேதிகள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது
 


கடந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதியும் விடுமுறை என அறித்தது. 12 சனிக்கிழமை என்பதால் 12, 13, 14, 15, 16, 17 ஆகிய ஆறு நாட்களும் தொடர்ந்து விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. விடுமுறை விஷயங்களில் எம்.ஜி.ஆர் -ஜெயலலிதாவே முடிவெடுக்காத அதிரடிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருவதாக அப்போது கொண்டாடப்பட்டார்.

அதற்கு முன்பாக தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. 5ம் தேதி திங்கட்கிழமை என்பதால் ஒருநாள் கூடுதலாக விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு. இதனால், தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்கள் நான்கு நாட்களானது. அதேபோல் 2020ல் கொண்டாடப்படும் பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு
 
11-01-20 சனி - விடுமுறை
12-01-20 ஞாயிறு - விடுமுறை.
13-01-20 திங்கள் - மட்டுமே வேலைநாள்
14-01-20 செவ்வாய் - போகி விடுமுறை
15-01-20 புதன் - பொங்கல்
16-01-20 வியாழன் - மாட்டு பொங்கல்
17-01-20 வெள்ளி - காணும் பொங்கல்
18-01-20 சனி - விடுமுறை
19-01-20 ஞாயிறு-விடுமுறை.

இதில், திங்கட்கிழமை மட்டுமே வேலை நாள் என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளித்து எடப்பாடி இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
பண்டிகை விடுமுறை ஓரிரு நாட்கள் என இருந்தபோது சொந்த ஊர் சென்று திரும்ப அவரச அவதிகளில் சிக்கித் தவித்தனர் மக்கள். அவதிகளால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதையே தவிர்த்து வந்தனர். 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டால், சாவாகசமாக ஊர் சென்று திரும்பும் நிலை ஏற்படும். ஆகையால் 9 நாட்கள் விடுமுறையை பெரும் விருப்பத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மக்கள்.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.