Header Ads

Header ADS

School Morning Prayer Activities - 07.08.2019


Image result for morning prayer


இன்றைய செய்திகள்

07.08.2019

கரூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்து அசத்தினர்இந்த செயற்கை கோள் வருகிற 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

செயற்கை வண்ணங்களில் உள்ள பலகாரங்கள் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு மூளைபாதிப்பு ஏற்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்தமிழக துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன்ரோகன் போபண்ணாமைனேனி உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்  5 நாள்களிலும் பேட்டிங் செய்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார் இங்கிலாந்து வீரர் பர்ன்ஸ்.
திருக்குறள்:255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

விளக்கம்:

உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.

பழமொழி

 Drawn wells have sweetest water

 
இறைக்கிற கிணறு ஊறும்

இரண்டொழுக்க பண்புகள்

1.
நம் நாட்டின் பாரம்பரிய உணவுகளை தெரிந்து கொண்டு அவற்றை உண்டு என உடல்நலத்தை பாதுகாப்பேன்.

2.
சுய சுத்தம், தலை முடி ஒழுங்காக வெட்டுதல் மற்றும் சரியான நேரத்திற்கு பள்ளி வருதல் போன்றவற்றை கடைபிடிப்பேன்.

பொன்மொழி

வாழ்வின் வெற்றியும் தோல்வியும் நாணயத்தின் இரு பக்கங்கள். கடுமையான உழைப்பால் பெறும் வெள்ளி நாணயம் ஆயிரம் தங்க நாணயத்திற்கு சமம்.

------
ஆபிராம் லிங்கன்

 
பொது அறிவு

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் எது?

சகாரா பாலைவனம்

உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?

 
லண்டன்

English words & meanings

Rose - a bushy plant which gives beautiful flowers
ரோஜா - உலகம் முழுவதும் அறியப்பட்ட விரும்பப்பட்ட மலர்.
உலகின் வயதான ரோஜா ஜெர்மனி தேச தேவாலய சுவரில் காணப்படுகிறது. வயது 1000 வருடம்.
டேவிட் ஆஸ்டின் எனும் ரோஜா வளர்ப்பாளர் வளர்த்த ரோஜா தான் உலகின் மிக விலை உயர்ந்தது. விலை 5 மில்லியன் டாலர். பெயர் ஜீலியட்

ஆரோக்ய வாழ்வு

மல்லிகைப்பூமன அமைதிக்கு  உதவும், கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

Some important  abbreviations for students

N/A.   -   Not Applicable
C&P.   -    Copy & Paste

நீதிக்கதை

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று  நடப்பட்டதுஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று
 
தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ  இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "
தென்னங்கன்று சொன்னது,
"
ஒரு வருஷம் ".
"
ஒரு வருஷம்னு சொல்றேஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?" கேட்டுவிட்டு  ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல  சிரித்தது.
தென்னங்கன்றோ அதைக்  காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.

           
ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக  இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது.
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானதுதென்னங்கன்றோ எப்போதும் போல  சலனமில்லாமல் புன்னகைத்தது.

         
வாழைக்கன்றை நட்டு  ஒரு வருடம்  ஆவதற்குள் தென்னங்கன்றைவிட  இருமடங்கு  உயரமாகி விட்டது. தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை
"
கடவுளுக்கு  உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!
நீ  இருக்குற மண்ணில் தான்  நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான்  எனக்கும் கிடைக்குதுஆனா பாரு , நான் மட்டும்  எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியதுதென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.
         
இன்னும் சிறிது காலம் சென்றதுஅதிலிருந்து  அழகான குலை வெளிப்பட்டதுஅது பூவும்காய்களுமாக அழகாக மாறியது. அதனுடைய பெருமை இன்னும்  அதிகமானதுஇரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக்  கழித்தது.
       
நல்ல  உயரம்பிளவுபடாத அழகிய இலைகள்கம்பீரமான குலைவாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனதுஇப்போது காய்கள் முற்றின .

       
ஒரு மனிதன்  தோட்டத்துக்கு வந்தான்வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான்வாழைக்காய்களைத் தட்டிப்  பார்த்தான்தென்னை மரத்தைத்  திரும்பிக்கூடப் பார்க்கவில்லை . இதை விட வேறென்ன  பெருமை வேண்டும்வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ளஅதன் குலைகளை வெட்டி எடுத்தான்வாழை மரம் கதறியதுஅதன் பெருமையெல்லாம் காணாமல் போனதுமரண பயம் வந்துவிட்டதுஅது பயந்தபடியே  அடுத்த காரியம் நடந்ததுஆம்வாழைமரம் வெட்டி சாய்க்கப்பட்டதுஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத்  தோலுறிக்கப் பட்டது.
       
தென்னை மரம்  இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்ததுஅதன் புன்னகைக்கு  என்ன  அர்த்தம்  என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.
ஒவ்வொரு நாளும் நமக்கும்  எத்தனை கேலிகள் இது போல?
கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம்வேகமாகவே காணாமல் போகும்.

"
ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது, பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்...

புதன்
கணிதம் & கையெழுத்து

மாயப்பெட்டி
ஒரு மாயப்பெட்டி உள்ளது . அதில் ஒரு ஓட்டை வழியாக சில கோலி குண்டுகளைப் போட்டால் வேறு வழியில் சில குண்டுகள் வெளியே வரும் .....
அதாவது 9 குண்டுகள் போட்டால் 4 குண்டுகள் வரும் ,13 குண்டுகள் போட்டால் 8 குண்டுகள் வரும் .....

கேள்வி:: 15 குண்டுகள் போட்டால் எத்தனை குண்டுகள் வெளியில் வரும்??

விடை ::
N-5.
முறையில்
9-5 = 4
13-5 =8
எனவே
15-5 =10
குண்டுகள்

கையெழுத்துப்பயிற்சி -


Today's Headlines

🌸 Near Karur, students of government school made a satellite weighing 30 grams.  The satellite will be launched on the 11th.

 
🌸 The Food Safety Department has warned that children who eat artificial colours are suffering from brain damage.

 
🌸There was  deep depression in the Bay of Bengal so No 1  storm warning flag has been hoisted in all Tamil Nadu ports.

 
🌸 Indians in the Davis Cup tennis match against Pakistan include Prajnesh Gunneswaran, Rohan Bopanna and Mainey.

 
🌸 Rory Joseph Burns of England  made a record by batting for all five days in a test match against Australia.

Prepared by
Covai women ICT_
போதிமரம்


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.