Header Ads

Header ADS

School Morning Prayer Activities -28-08-2019


Image result for morning prayer


Prepared by
Covai women ICT_போதிமரம்


இன்றைய செய்திகள்


28.08.2019

நிலவின் பள்ளங்களைத் துல்லியமாக படம் பிடித்த சந்திரயான்2! இஸ்ரோ வெளியிட்ட இரண்டாவது புகைப்படம்.

அக்டோபரில் வருகிறது முதல் 'தனியார் ரயில்' - இந்திய ரயில்வே அறிவிப்பு.

கோவைநீலகிரிதேனியில் கனமழைக்கு வாய்ப்பு.

வைகைபெரியார் அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்புமுதல்வர் உத்தரவு!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை
16-ல் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறினார் பும்ரா.

பிரதமர் புது உலக சாம்பியன் *சிந்துவை சந்தித்தார்அப்பொழுது அவரை *இந்தியாவின் பெருமைஎன்று பாராட்டினார்.

திருக்குறள்:269

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

விளக்கம்:

தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.

பழமொழி

 All happening is for the best

 நடப்பதெல்லாம் நன்மைக்கே

இரண்டொழுக்க பண்புகள்

1. நன்றி, மன்னித்து கொள்ளுங்கள் என்ற இரண்டு வார்த்தைகளும் என் உள்ளத்தின் நிலையை காண்பிக்கும் மற்றும் என் பண்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

2. எனவே அவற்றை நான் எப்பொழுதும் பயன்படுத்த முயல்வேன்.

பொன்மொழி

நம்மிடம் திறமை மிகுதியாக இருந்தாலும் சரியான அணுகு முறைகள் இல்லை என்றால் அது பயனற்று போகும்...

---- இறையன்பு

பொது அறிவு

 1. சாக்லேட் எந்த மரத்தின் விதையிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?

கோ கோ         

2. உலகின் மிகப்பெரிய தேசிய கீதம் உள்ள நாடு

"கிரேக்க நாடு"    (128 வரிகள்)             

English words & meanings

Dicotyledons : a seed which contains two leaf parts inside it
இரு வித்திலைத் தாவரம்.
ஆணி வேர் தொகுப்பு கொண்டு இருக்கும்

Dismantle - take an object or structure into pieces
ஒரு பொருளை அதன் பாகங்கள் ஆக பிரித்து எடுத்தல்.

ஆரோக்ய வாழ்வு

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய்  சரும நலனுக்கு ஏற்றது .குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெயில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம் .

Some important  abbreviations for students

GM - General Manager

 IR - Indian Railways

நீதிக்கதை

தாய் ஒட்டகமும், குட்டி ஒட்டகத்தின் கேள்வியும்

ஒரு மாலைப்பொழுதில் தாய் ஒட்டகமும், குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டிருந்தன. குட்டி ஒட்டகம் வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான். அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே ஏன் என்றது. தாய் சொன்னது நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள். நமக்கு தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. அதனால், கிடைக்கும் தண்ணீர்ரை முடிந்தளவு நம் உடம்பில் சேமித்துக்கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கு தான் இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு என்றது தாய்.

குட்டி ஒட்டகம் நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக்கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி ஏன் இல்லை? என்றது. தாய் ஒட்டகம் சொன்னது, பாலைவனத்தில் மணல், புயல் அடிக்கும், கண்ணுலையும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு என்றது. குட்டி, அம்மாவின் கால் குளம்பைப் பார்த்து இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு? என்று கேட்டது. மணல்ல நடக்கும்போது நம்ம கால் மணல்ல புதையாமல் நடக்கத்தான் என்று பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.

குட்டி யோசனையுடன் கேட்டது, அம்மா பல்லும், நாக்கும் இவ்வளவு கெட்டியா இருக்கே அது ஏன்?. அம்மா ஒட்டகம் சொன்னது பாலைவனத்தில் செடி, கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்து சுவைத்துச் சாப்பிட வேண்டாமா? அதற்குத்தான் என்றது. இப்போது குட்டி பட்டென்று கேட்டது. அம்மா! இதையெல்லாம் வைத்துக்கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக்காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்? என்று கேட்டதும், தாய் ஒட்டகம் பதில் பேசமுடியாமல் அமைதியாக நின்றது.

புதன்

கணக்கு & கையெழுத்து

என் வீடு எதுவோ ??..
~~~~~~~~~~~~~~

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் ஒரு ஆங்கில எழுத்துடைய தளம் முகவரியை கண்டு பிடித்து கொடுக்கும் படி ஒரு முதியவர் ஒருவர் என்னிடம் சவால் விட்டார் ...

நான் ஏதாவது குறிப்பு தருமாறு கேட்டுக் கொண்டேன் ..

அவர்  ஒரு சதுரத்தின் பக்கங்கள் ,டஜனில் பாதி,மற்றும் திசைகள் இவற்றின் எண்ணிக்கையின் கூடுதல் பலனில்  கிடைக்கும் இலக்கம் , வீட்டு முகவரில் உள்ள ஆங்கில எழுத்து ஆகும் ,என்றார்

நான் அவருடைய வீட்டு முகவரியை கண்டுபிடித்துவிட்டேன் ...
எப்படி என்று சொல்லுங்கள் ...??

விடை: 4+ 6+4 =14
ஆங்கில எழுத்தில் 14 வது எழுத்து N
எனவே N தளம் அவருடைய முகவரி ஆகும் ..


கையெழுத்துப் பயிற்சி - 12
 


Today's Headlines

🌸Chandrayaan 2 captures the grooves of moon  .The second photo released by ISRO.

🌸First private train to arrive from October - Indian Railways announced.

 🌸 There is a chance for heavy rain in Theni , Kovai and Nilgiris.

 🌸  water will be opened for irrigation from Vaigai and Periyar Dam  announced our Chief minister.

🌸ICC Test Ranking: Bumrah jumps from 16th to 7th.

 🌸 prime minister meets our New World Champion * Sindhu *  Calls her 'India's Pride'.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.