Header Ads

Header ADS

வீட்டில் இருந்த படியே ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ!! JIO அதிரடி




ரிலையன்ஸ் ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தியேட்டர் போகாமல் வீட்டில் இருந்த படியே படம் பார்க்க பக்கா ப்ளானை அறிமுகம் செய்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆம், ஜியோ ஃபைபர் சேவையின் கீழ் ஒரு திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் அதே நாளில் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே திரைப்படங்களைப் பார்க்கக்கூடிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்தார்.

இந்த சேவை 2020 ஆம் ஆண்டு தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
 
ஜியோ ஜிகா ஃபைபர் அறிமுக திட்டத்தில், ஜியோ வாடிக்கையாளர்கள் ஆண்டு திட்டத்தை தேர்வு செய்தால் Jio Forever திட்டத்தின் கீழ் ஹெச்டி டிவி அல்லது பிசி வழங்கப்படுமாம். அதோடு 4கே செட் டாப் பாக்ஸும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.