கன மழை காரணமாக 2 மாவட்டங்களுக்கு நாளை(9.8.2019) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கன மழை.. கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கோவை:
கடந்த பல நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது. இந்த மழை படிப்படியாக உள் மாவட்டங்களுக்கும் பரவி பெய்ய தொடங்கியுள்ளது. இன்று காலை முதலே கோவை மாவட்டம் முழுக்க கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்திலுள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் பெரும் அவஸ்தைப்பட்டு வந்தனர். வெள்ளத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில்
முன்னெச்சரிக்கையாக, நாளை கோவை மாவட்டம் முழுக்க பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று மாலை அறிவித்துள்ளார். நாளையும் தொடர்ந்து மழை பெய்தால் நிலைமையை ஆய்வு செய்து, நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதேபோல நீலகிரி மாவட்டத்திலும், நாளை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் திவ்யா அறிவித்துள்ளார்.

No comments
Post a Comment