தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு
கல்வி உதவி தொகைக்கான, தேசிய திறனறிதல் தேர்வு தேதியை, மத்திய அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்,மேல்நிலையில், பிளஸ் 2 வரையிலும், அதன்பின், பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், கல்வி உதவி தொகை பெறலாம்.இதை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சிகவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., வழங்குகிறது.
இந்த
கல்வி உதவி தொகை, ஒவ்வொரு மாநில மாணவர்களுக்கும், தகுதிதேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இந்த தகுதி தேர்வை எழுதலாம். நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய திறனறிதல் தேர்வுக்கான தேதியை, என்.சி.இ.ஆர்.டி., நேற்று அறிவித்தது.
அதன்படி, மாநில அளவிலான முதற் கட்ட தகுதி தேர்வு, நவ., 3ல் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், தேசிய அளவில் நடத்தப்படும் இரண்டாம் கட்ட தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வு, அனைத்து மாநிலங்களிலும், அடுத்தாண்டு, மே, 10ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment