Header Ads

Header ADS

மாணவர்கள் பள்ளிக்கு பைக் ஓட்டி வரத் தடை - மீறினால் வகுப்பறைக்குள் அனுமதிக்கக்கூடாது என அரசு எச்சரிக்கை



பள்ளிக்கு, இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும் மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் , பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது ஆசிரியர்கள் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
பள்ளிகளில் காலையில் நடைபெறும் இறைவணக்கக் கூட்டத்தில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.அதேபோல், வகுப்புகள் முடிந்து மாணவர்கள் கூட்டமாக வெளியே வந்து பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால், அதிகளவு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், அதனைத் தவிர்க்க , ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் மாணவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் உடற்பயிற்சி ஆசிரியர்கள், பேருந்து நிலையத்தில் நின்று, ஒரு மணி நேரம் மாணவர்களை நெறிமுறைப்படுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளதுமுக்கியமாக பள்ளிகளுக்கு, இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும் மாணவர்களை, வகுப்பறைக்குள் அனுமதிக்கக் கூடாது என அந்த செய்திக் குறிப்பில்தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.