ஒரு மாணவர் கூட சேராத 46 பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களின் தற்போதையை நிலை என்ன? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, August 12, 2019

ஒரு மாணவர் கூட சேராத 46 பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களின் தற்போதையை நிலை என்ன?





பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகம் முழுவதும் 46 தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தான் ஒரு மாணவர்கள் கூட இல்லை. ஆனாலும், அந்த பள்ளிகளை மூடிவிடவில்லை;  அங்கு இரண்டு ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள், எந்த வேலையும் இல்லாததால் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அயல்பணி அடிப்படையில் மாற்றுப்பள்ளிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

 தினமும் அங்கு சென்று மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகின்றனர்.தற்போது ஒரு மாணவர்கள் கூட இல்லாத நிலையில், அந்த பள்ளிகளில் தற்காலிகமாகத்தான் நூலகமாக மாற்றுகிறோம். பல பள்ளிகளையும் இப்படி செய்வதாக கூறுவது சரியல்ல. அந்த பள்ளி கட்டிடம் பயன் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அந்தபள்ளிகளை நூலகமாக தற்காலிகமாக மாற்றப்படுகிறது. அந்த பள்ளிகளில் 6 மாதத்திற்குள் அந்த பகுதிகளில் உள்ள மாணவர்களை மீண்டும் சேர்த்து அடுத்த கல்வியாண்டு முதல் அது, பள்ளியாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு இத்தகைய நிலைமையைகூர்ந்து கவனித்து தான் வருகிறது. பள்ளிகளை மூடிவி்ட முடிவு செய்து விட்டது போல பேசப்படுவதில் உண்மையல்ல. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.கடந்த 2 ஆண்டுகளாக தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தது. அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இப்போது நிலைமை மாறி வருகிறது.



பல பள்ளிகளில் தரம் உயர்த்தி, எல்லா வகையிலும் மாணவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் மாற்றி  அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சேர்க்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.  அரசு நடவடிக்கை காரணமாக இந்தாண்டு அரசு பள்ளிகளில் 1.72 லட்சம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.எனினும், மொத்தத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி,46 பள்ளிகளில் தான் ஒரு மாணவர்கள் கூட இல்லை. இந்த பள்ளிகளில் தலா 2 ஆசிரியர்கள் இருக்கின்றனர். அந்த ஆசிரியர்கள் பணி இல்லாமல் சும்மா இருக்க கூடாது என்பதற்காக அவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு அயல்பணி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மூடப்பட்டபள்ளிகள் தற்காலிகமாகத்தான் நூலகமாக இருக்கும். பள்ளியில் மாணவர் சேர்க்கை ஏற்படுத்தி மீண்டும் ஆசிரியர்கள் அதே பள்ளிக்கு பணியமர்த்தப்படுவார்கள்.



தமிழகத்தில் பள்ளிகள் எண்ணிக்கையை உயர்த்திய நாங்கள் எப்படி பள்ளிகளை மூடுவோம்? கண்டிப்பாக  ஒரு பள்ளிகளை கூட மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. 46 பள்ளிகளும் மீண்டும் இயக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அரசு மேல்நிலை பள்ளிகளில் நவீன அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படுகிறது. இதற்காக, சீனாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் தான் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல் நிலைபள்ளகளில் அறிவியல் ஆய்வகம் அமைக்கும் பணியை செய்வார்கள். இந்த பள்ளிகளில் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து அவர்கள் சீனாவுக்கு அனுப்பப்பட உள்ளனர். அந்த மாணவர்கள், சீனாவிற்கு அனுப்பி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.



குறிப்பாக, மாணவர்கள் ஹெலிகாப்டர், ஏரோபிளேன் போன்று உருவாக்கும் அளவுக்கு அவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள், கணிதத்தை எளிதில் புரிந்து படிக்கும் அளவுக்கு மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஆப் மூலம் கணிதத்தை எளிதாக படித்து புரிந்து கொள்ள முடியும். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவும், கணிதத்தில் சிறந்து விளக்குவதற்காகவும் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.அரசு நடவடிக்கை  காரணமாக இந்தாண்டு அரசு  பள்ளிகளில் 1.72 லட்சம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில்  சேர்க்கப்பட்டு உள்ளனர். 46 பள்ளிகளில் தான் ஒரு மாணவர்கள் கூட இல்லை.

No comments: